ரஜினியின்
லிங்கா படம் ரிலீசுக்கு முன்பே
ரூ 200 கோடியைக் குவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில்,
ரஜினி இரு வேடங்களில் நடிக்கும்
படம் லிங்கா.
இதில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா,
அனுஷ்கா நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான்
இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. படத்தின்
அனைத்து மொழி உரிமை மற்றும்
உலக உரிமையை ஏற்கெனவே ஈராஸ்
நிறுவனம் ரு 165 கோடிக்கு வாங்கி
இந்திய சினிமாவை பிரமிக்க வைத்துவிட்டது.
அடுத்து
படத்தின் ஆடியோ உரிமை மட்டும்
ரூ 7 கோடிக்கு இதே நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளது.
இதில் ஐட்யூன்ஸ், ரிங்டோன்கள் உரிமை உள்பட அனைத்தும்
அடங்கும்.
இந்தப் படத்துக்குதான் இந்திய
சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரும்
தொகை சேட்டிலைட் உரிமையாகக் கைமாறியுள்ளதாக பேச்சு நிலவுகிறது. சன்
டிவி ரூ 28 கோடி தர
முன்வந்தது லிங்காவுக்கு.
விஷயம்
தெரிந்ததும், அதைவிட அதிகமாகக் கொடுத்து
ஜெயா டிவி இந்தப் படத்தைப்
பெற்றுள்ளது. ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி
இந்த டீலுக்கு போனஸ். ரஜினியின் சிறப்புப்
பேட்டியும் உண்டு என்கிறார்கள்.
ஆக படம் வெளியாகும் முன்பே
ரூ 200 கோடியை குவித்திருக்கிறது லிங்கா.
படத்தை வாங்கிய ஈராஸ் தெலுங்கு,
மலையாளம், கன்னத்தில் பெரும் விலைக்கு விநியோகஸ்தர்களுக்கு
விற்றுள்ளது. தெலுங்குப் பதிப்பு மட்டும் ரூ
40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்தியில் ஈராஸ் நிறுவனமே வெளியிடுகிறது.
உலகளாவிய வெளியீட்டை தனது துணை நிறுவனமான
ஐங்கரன் மூலம் மேற்கொள்கிறது ஈராஸ்.
No comments:
Post a Comment