கழிவறை
கட்டுதல், கிராமங்களை தத்தெடுத்தல் போன்ற என்னுடைய திட்டங்களை
நரேந்திர மோடி காப்பியடித்துவிட்டார் என சமாஜ்வாடி
கட்சி தலைவர் முலாயம் சிங்
யாதவ் குற்றம்சாட்டிள்ளார்.
இதுகுறித்து
அவர் கூறுகையில், ''1990 ஆம் ஆண்டே கழிவறை
கட்டும் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.
மேலும், அப்போதே கிராமங்களையும் நான்
தத்தெடுத்தேன். ஆனால், மோடி எனது
திட்டங்களையெல்லாம் காப்பியடித்துவிட்டார். அவர் பேசுவதை நான்
ஏற்கனவே செய்து விட்டேன் என்பதை
அவர் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும்,
மோடி குப்பைகளை அகற்றுவது குறித்து பேசுகிறார். முதலில் ஏழ்மையை அகற்றுங்கள்.
குப்பைகள் தானாக மறைந்துவிடும்.
மேலும்,
நாம் அண்டை நாடுகளுடன் நல்ல
உறவை கொண்டிருக்க வேண்டும். பகையை குறைக்க வேண்டும்.
எனவே, மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் நல்லது என நான்
நினைக்கிறேன்'' என்றார்.
மேலும்,
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும்
கட்சி தலைவர்கள் தலா இரண்டு கிராமங்களை
தத்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்
கொண்டார்
No comments:
Post a Comment