விண்டோஸ்
சர்வர் 2003ஐ நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட்
நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்டோஸ்
சர்வர் 2003 ஆபரேட்டிங் சிஸ்டம் கடந்த 2003ஆம்
ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
இந்த ஓ.எஸ்.சின்
அப்டேட்டான 'சர்வீஸ் பேக்-2' 2007ஆம்
ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
தற்போது இதனுடைய கடைசி பதிப்பாக
'2012 ஆர்-2' சர்வர் நடைமுறையில் இருந்து
வருகிறது.
இதற்கிடையே,
பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தற்போது
விண்டோஸ் 7, 8.1 போன்றவற்றுக்கு மாறிவிட்டனர். ஆனால், சில பயன்பாட்டாளர்கள்
2003 சர்வரையே இன்னும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,
மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்த ஆண்டு (2015), ஜூலை
14ஆம் தேதி முதல், விண்டோஸ்
2003 சர்வர் பதிப்பு சேவையை நிறுத்தப்
போவதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து,
இனிமேல், 2003 சர்வருக்கான செக்யூரிட்டி பேட்ச்கள் மற்றும் அப்டேட்கள் வழங்கப்பட
மாட்டாது என்பதால் எளிதாக வைரஸ் மற்றும்
மால்வேர் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும் என
கணினி வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால்,
விரைவில் மேம்படுத்தப்பட்ட சர்வர் பதிப்புகளுக்கு மாற
வேண்டிய கட்டாயத்தில் பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment