உண்மையை
ஒப்புக்கொள்ள தில் வேண்டும்.. நடந்த
விஷயத்தை ஏன் மறைக்க வேண்டும்
என்று நடிகை ராய் லட்சுமி
மறைமுகமாக த்ரிஷாவைத் தாக்கியுள்ளார்.
நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர்
வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக
செய்திகளும் படங்களும் வெளியாகின. ஆனால் இதனை த்ரிஷாவும்
அவர் தாயாரும் மறுத்து வருகின்றனர். வருண்
மணியனோ அமைதி காக்கிறார்.
ஊடகங்களில்
இந்த செய்தி உறுதிப் படுத்தப்பட்டது,
உண்மையானது என ஆதாரங்களுடன் செய்தி
வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் த்ரிஷாவின்
மறுப்பை மறைமுகமாகத் தாக்கியுள்ளார் நடிகை ராய் லட்சுமி.
இதுகுறித்து
அவர் ட்விட்டரில், உண்மையை ஒப்புக் கொள்ள
தில் வேண்டும். அது இல்லாததால்தான் சிலர்
நடந்த உண்மையை மறைக்கின்றனர். இது
எனக்கு ஆச்சர்யமாக உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment