விலங்குகளை
தத்தெடுத்தும், பூங்கா வளர்ச்சிக்கு நிதியுதவி
செய்யும் பட்சத்தில், நடிகர் மற்றும் நடிகைகள்
எந்த விலங்கை விரும்புகிறார்களோ, அந்த
விலங்குக்கு அவர்களின் பெயர் வைக்கப்படும் என்று
வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் தெரிவித்தார்.
வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல்
பூங்கா உள்ளது. இங்கு பலவகையான
விலங்குகள் உள்ளன.
ஆயிரக்கணக்கான
பார்வையாளர்கள் நாள்தோறும் வந்து கண்டுகளித்துவிட்டு செல்கின்றனர். இதில்
சிறுத்தை, வெள்ளை புலிகள் மற்றும்
சிங்கங்களின் உலாவிடங்களுக்கு ஏராளமான பள்ளி மாணவர்கள்,
குழந்தைகள், பார்வையாளர்கள் சென்று நேற்று பார்வையிட்டனர்.
இதில் அனு என்ற வெள்ளை
புலியின் 3 குட்டிகள் உற்சாகத்துடன் ஒன்றோடு ஒன்று ஓடியாடி
தாக்கி விளை யாடிக் கொண்டிருந்ததை
குழந்தை கள் முதல் பெரியவர்கள்
வரை கண்டு ரசித்தனர்.
மேலும்
ராமா என்ற ஆண் வெள்ளை
புலி ஒன்று கூண்டின் வளைக்குள்
தனியாக இங்கும், அங்குமாக வாக்கிங் சென்று வருகிறது. சில
சமயம் தண்ணீரில் படுத்து நீச்சல் அடித்ததை
யும் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா
உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கும் நடிகர்,
நடிகைகளின் பெயர்கள் வைக்கப்படுமா? என்று பூங்கா இயக்குநர்
ரெட்டியிடம், நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில், இதுவரை
அதுபோன்று நடிகர், நடிகைகளின் பெயர்கள்
வைக்கப்படவில்லை. பூங்காவில் உள்ள விலங்குகளை தனியார்
நிறுவனத்தினர் தத்தெடுத்து வருகின்றனர்.
அதற்கான
நிதியுதவியும் பூங்காவுக்கு வழங்குகின்றனர். பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிக்க
நடிகர், நடிகைகள் தாமாகவே முன்வந்து அவர்களுக்கு
பிடித்த விலங்குகளை தத்தெடுத்து அதற்கான நிதியுதவியை பூங்காவுக்கு
வழங்கினால் நடிகர், நடிகைகளின் பெயர்களை
வைக்க பரிசீலிக்கப்படும். இதற்கு நடிகர், நடிகைகள்
முன்வரவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment