Saturday, November 1, 2014

வெளியானது ரஜினியின் லிங்கா முதல் டீசர்.. ரசிகர்கள் உற்சாகம்!

ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் டீசர் எனப்படும் முதல் சிறு முன்னோட்டப் படம் இன்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியானது.

அதில் ரஜினியின் தோற்றம், ஸ்டைல் மற்றும் கம்பீரம் அவரது ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. டீசர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைத் தளங்கள் பரபரக்க ஆரம்பித்துவிட்டன.

ட்விட்டரில் ரஜினி, லிங்கா, டீசர் என்ற வார்த்தைகளே முன்னணியில் உள்ளன. 41 நொடிகள் மட்டுமே வரும் இந்த டீசர், பார்க்கும் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் கால ரஜினி, இன்றைய நவீன கால ரஜினி என இரு தோற்றங்களில் ரஜினி அசத்துகிறார்.

 இவருக்கு 64 வயது என கோயிலில் கற்பூரம் அடித்துச் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு வேகம், துடிப்பு. இந்த 41 செகன்டுகளில் எவ்வளவு பெஸ்டாக ஒரு டீசரை உருவாக்க முடியுமோ அந்த அளவுக்கு உருவாக்கி பிரமிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

படத்தில் இடம்பெறும் ஒரு அணியில் His Highness Raja Lingeswara என கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் ஒரு ரஜினியை இது குறிப்பதாகத் தெரிகிறது. சில காட்சிகளில் சிவாஜி தி பாஸ் படத்தில் வருவாரே அதுபோலத் தெரிகிறார் ரஜினி. ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை இன்றிலிருந்து டிசம்பர் 12 வரை திருவிழா உற்சாகம்தான்!




ரஜினியின் லிங்கா பட ட்ரைலர் { Linga trailer }


No comments:

Post a Comment