எனக்கு
கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பே அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் நரேந்திர
மோடியின் மனைவி ஜசோதா பென்
கூறியுள்ளார்.
பிரதமரின்
மனைவியான தனக்கு வழங்கப்பட வேண்டிய
பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தற்போது வழங்கப்படும் பாதுகாப்பு
ஏற்பாடுகள் என்னென்ன? என்பது பற்றி மேஹ்சானா
மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மூலம்
அறிந்து தனக்கு தெரியப்படுத்த வேண்டும்
என்றும் தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் மூலம் அவர் மனு
செய்துள்ளார்.
குஜராத்
மாநிலம் மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள உஞ்சா நகரத்தில்
தனது சகோதரருடன் வசித்து வருகிறார் ஜசோதா
பென்.
இந்திய
அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள சட்டங்களின்படி,
இந்த நாட்டின் பிரதமருக்கு எத்தனை காவலர்களின் பாதுகாப்பு
வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பான முழு
விளக்கத்தையும், தற்போது தனக்கு வழங்கப்படும்
பாதுகாப்பு பற்றிய விபரத்தையும் தெரிவிக்க
வேண்டும் என்று அந்த மனுவின்
மூலம் கோரியுள்ளார்.
தனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீசார் எல்லாம் அரசு கார்களில்
செல்லும்போது, இந்த நாட்டின் பிரதமரின்
மனைவியாகிய நான் பொது வாகனங்களில்
(பஸ், ரெயில், ஆட்டோ மற்றும்
ரிக்ஷா) செல்ல வேண்டியுள்ளது
என்று இன்னொரு சரவெடியையும் இந்த
மனுவில் பற்றவைத்துள்ளார் ஜசோதா பென்.
மறைந்த
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
தனது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்திரா காந்தி
படுகொலையை நினைத்து, எனது பாதுகாப்புக்கு தற்போது
நியமிக்கப்பட்டுள்ள காவலர்களை பார்க்கும்போது எனக்கு அச்சமாக உள்ளது.
எனது பாதுகாப்புக்காக அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளமைக்கான நியமன ஆணைகளை ஒவ்வொரு
பாதுகாவலரும் காண்பிக்க வேண்டியதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்
கொண்டுள்ளார்.
இது பற்றிய தகவல் நேற்று
வெளியான உடன், செய்தியாளர்களிடம் விளக்கம்
அளித்த மேஹ்சானா மாவட்ட சிறப்பு பாதுகாப்பு
போலீஸ் இன்ஸ்பெக்டர், நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்றவுடன்,
அவரது மனைவியான ஜசோதா பென்னுக்கு ஆயுதம்
ஏந்திய போலீசார் உட்பட 10 சிறப்பு பாதுகாப்பு போலீஸ்
படையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ‘ஷிப்ட்'டுக்கு 5 பேர்
வீதம் இரு ‘ஷிப்ட்'களாக
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
என தெரிவித்துள்ளார்.
மேலும் .....
No comments:
Post a Comment