தென்னிந்திய
இசையமைப்பாளர்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான்,
வித்யாசாகர், அம்சலேகா, கீரவாணி முக்கியமானவர்கள். இசை
ஜாம்பவான் களாகத் திகழும் அவர்களிடம்
வேலை செய்வது அவ்வளவு லேசான
காரியம் இல்லை.
ஆனால் இசையமைப்பாளர் ஸ்ரீ
முரளி, அவர்களிடம் சுமார் 6000 பாடல்களுக்கு கீ போர்டு வாசித்திருக்கிறார்.
2500 படங்களின் பின்னணி இசைக்கு கீ
போர்டு வாசித்திருக்கிறார்.
பாக்யராஜ்
இசையமைத்த ‘இது
நம்ம ஆளு’ உட்பட
பத்து படங்களுக்கும் இவர்தான் உதவி இசையமைப்பாளர். ‘விளையாடவா’
படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி
தெலுங்கு, கன்னடப் படவுலகிலும் டஜன்
படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இப்போது
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில்
உருவாகும் ‘பேட் கேர்ள்ஸ்’ படத்துக்கு
இசையமைத்திருக்கிறார். “ஒரே நேரத்தில் பல
மொழிகளில் உருவாகும் ‘பேட் கேர்ள்ஸ்’ படத்துக்கு
இசையமைப்பது சவாலான காரியம். ஆனால்
இந்தப் படம் எனக்கு திருப்புமுனையாக
இருக்கும்” என்கிறார் ஸ்ரீமுரளி.
No comments:
Post a Comment