ஷங்கர்
இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்க
பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில்
பிரமாண்டமாக தயாராகியுள்ளது ஐ. ரஹ்மான் இசையமைத்திருக்கும்
இந்தப் படத்துக்கு ஐ என்ற பெயரை
ஷங்கர் தேர்வு செய்ய என்ன
காரணம்?
ஐ எப்படி உருவாக்கப்பட்டது என்பதைப்
பற்றிய வீடியோவை சமீபத்தில் ஷங்கர் வெளியிட்டார். அதில்
ஐ என்று பெயர்
வைத்ததற்கான காரணத்தை அவர் கூறியுள்ளார்.
இப்படத்திற்கு
ஏற்ற தலைப்பு அழகன் அல்லது
ஆணழகன். ஆனால் இந்த இரண்டு
தலைப்பில் ஏற்கனவே படங்கள் வெளியாகிவிட்டது.
எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு
எழுத்தில் தலைப்பு வைக்க வேண்டும்
என்று ஆசை.
அதேபோல்
ஐ என்ற எழுத்து
மேல் ஒரு ஈர்ப்பு. ஐ-க்கு தமிழில் என்ன
அர்த்தம் என்று தேடினோம். அப்போது
ஐ என்றால் அழகு
என்று ஒரு அர்த்தம் இருந்தது.
உடனே இதுதான் சரியான தலைப்பு
என்று வைத்தேன். இவ்வாறு அதில் அவர்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment