எஸ்.ஜே.சூர்யா விஷயத்தில்
சனி கரகம் எடுத்து ஆடுகிறது.
ஒருகாலத்தில் ஓஹோஎன்றிருந்தவர் நடிப்பு ஆசையில் சினிமாவிலிருந்து
காணாமலேப் போனார்.
பெரிய இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கி
நடித்திருக்கும் இசை விரைவில் திரைக்கு
வருகிறது. இதன் இசையும் சூர்யாதான்.
டிசம்பர்
12 ரஜினியின் பிறந்தநாளில் படத்தை வெளியிடுவதாக அவர்
சமீபத்தில்தான் அறிவித்தார். லிங்கா தள்ளிப் போகும்,
டிசம்பர் 12 திரைக்கு வராது என்ற நம்பிக்கையில்
டிசம்பர் 12-ஐ தேர்வு செய்தார்.
ஆனால் நேற்று மாலையோடு அவரது
திட்டம் நொறுங்கியது. லிங்கா டீஸருடன் டிசம்பரில்
படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறார்கள்.
ரஜினி படத்துடன் இசையை வெளியிடுவது சுனாமியில்
துடுப்பு போடுவதற்கு சமம். தேதியை மாற்றப்
போகிறாரா இல்லை, துணிந்து நீந்தப்
போகிறாரா?
No comments:
Post a Comment