இந்திய
திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும்
நடிகர் சல்மான் கான் என்றும்
தபங் படத்திற்கு பின்னர் அவருடைய சம்பளம்
மளமள என்று உயர்ந்து, சமீபத்தில்
ஒரு புதிய படத்தில் நடிக்க
அவர் ரூ.60 கோடி சம்பளம்
பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.அமீர்
கான் ஒரு படத்திற்கு ரூ.45
கோடியும், ஷாரூக்கான் ரூ.35 கோடியும் சம்பளமாக
பெறுவதாக அதே ஊடக செய்திகள்
தெரிவிக்கின்றன. அக்ஷய் குமார் ஒரு
படத்திற்கு ரூ.40 முதல் ரூ.45
கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
ஹிரித்திக் ரோஷனுக்கு ரூ.25 கோடி அளவில்
சம்பளமாக வழங்கப்படுகிறது.ஜான் ஆபிரகாமுக்கு ஒரு
படத்தில் நடிப்பதற்கு ரூ.15 கோடி சம்பளமாக
வழங்கப்படுகிறது. ரன்பீர் கபூருக்கு ரூ.15
கோடி தரப்படுகிறது. அஜய் தேவ்கனுக்கு ஒரு
படத்தில் நடிப்பதற்கு ரூ.18 கோடி தரப்படுவதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. சைஃப் அலி கான்
ஒரு படத்திற்கு ரூ.15 கோடி முதல்
ரூ.20 கோடி வரை சம்பளமாக
பெறுகிறார்.
70 வயதாகும் நடிகர்
அமிதாப் பச்சன் திரையுலகின் உச்சத்தில்
இருந்தபோது ரூ.4 கோடி முதல்
ரூ.6 கோடி வரையில் சம்பளம்
பெற்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நடிகர் ரஜினிகாந்த் ஒரு
படத்திற்கு ரூ.25 கோடி முதல்
ரூ.30 கோடி வரையில் சம்பளமாக
பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய நடிகைகளில் அதிக
சம்பளம் வாங்கியவர் உலக அழகி ஐஸ்வர்யா
ராய்தான். இப்போதுள்ள நடிகைகளில் கரீனா கபூர் ரூ.12
கோடி முதல் ரூ.15 கோடி
வரையும் பிரியங்கா சோப்ராரூ.9 கோடியும் சம்பளமாக பெறுகின்றனர்.
No comments:
Post a Comment