Wednesday, November 12, 2014

பிரபலங்களின் காதல் கசக்கிறது

.பிரபலங்கள் காதலிக்கும்போது தங்கள் ஜோடியை வான் அளவுக்கு புகழ்வார்கள். அடுத்தவர்கள் கண்களில் மண்ணை தூவிவிட்டு ஒன்றாக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வார்கள். ஜோடிக்கு பரிசுகளை அள்ளி வழங்குவார்கள். ஆனால் பிரிவு ஏற்படும்போது அவ்வளவுதான், அவர்களுக்குள் இருக்கும் காதல் வற்றிபோய், ஒருவரை ஒருவர் விட்டேனாபார் என்று பழிவாங்க புறப்பட்டு விடுவார்கள். ஆசைஆசையாய் காதலித்துவிட்டு, பிரிந்த நடிகர்நடிகைகள்  பற்றிய ஒரு அலசல்.

பிரீத்தி ஜிந்தாநேஸ்வாடியா:

ஒன்பது வருடங்களுக்கு முன்னால் மும்பையில் நடந்த ஒரு வண்ணமயமான விருந்தில் பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா கலந்துகொண்டார். அங்கு நேஸ்வாடியாவை சந்தித்தார். புகழ் உச்சியில் இருந்த பிரீத்திக்கும் அவருக்கும் அறிமுகம் நிகழ்ந்தது. பல இடங்களில் சந்தித்தார்கள். நண்பர்களானார்கள். ஒரு கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கி இருவரும் தொழிலில் பங்குதாரர்களானார்கள்.

பார்க்கும் இடமெல்லாம் இருவரும் ஒன்றாகவே தென்பட்டார்கள். ஒருவரை இன்னொருவர் பிரியாத நெருக்கம். இணையில்லாத காதலர்களாக வலம் வந்த அவர்களது உறவில் திடீரென்று புயல். பேசி தீர்த்துக் கொள்ளும் வரைகூட பொறுமையில்லாமல் பலரிடமும் புலம்பி தீர்த்துவிட்டார் பிரீத்தி. இது நேஸ்க்கு துளியும் பிடிக்கவில்லை.

நம்முடைய பிரச்சினையை மற்றவர்கள் தீர்த்து வைக்கப் போவதில்லை. அப்படியிருக்க மற்றவர்களிடம் நீ எப்படி என்னை பற்றி அவதூறாக பேசலாம்என்று பிரீத்தியிடம் வாக்குவாதம் செய்தார். கடைசியில் அது தீர்த்து வைக்கமுடியாத பிரச்சினையாகிப் போனது.

நம்மால் நேசிக்கப்பட்ட ஒருவருக்கு நம்மால் ஏற்பட்ட தவறுகளை மன்னிக்கும் மனம் நிச்சயம் இருக்கும். ஆனால் ஒருவருடைய தன்மானம் பாதிக்கப்படும் போது யாரும் யாரையும் மன்னிக்க மாட்டார்கள். இப்படி ஏற்படும் பிரிவுகள்தான் அதிகம். இருவரும் பிரிந்தேபோனார்கள்.

சாஹித் கபூர்கரீனா:

காதலித்து திருமணம் வரை வந்த இவர்கள் திடீரென்று கருத்துவேறுபாட்டால் பிரிந்துவிட்டார்கள். பிரிந்தபோது சாஹித்இதுவரை ஒரு மாய உலகத்தில் இருந்திருக்கிறேன். அதிலிருந்து விடுபட்டு வந்திருக்கிறேன். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய நேரமும், சிந்தனையும், அறிவும் பெருமளவு வீணடிக்கப்பட்டுவிட்டது. அது என் முன்னேற்றத்தையே தடுத்தது என்பதை இப்போதுதான் உணர்கிறேன். கரீனாவிடம் இருந்து பிரிந்த பிறகுதான் எனக்கு வெற்றி படங்களே அமைந்தனஎன்று கரீனா மீது வெறுப்பை கொட்டினார்.

ஜான் ஆப்ரகாம்பிபாஷா:

இவர்கள் இருவரும் காதலர்களாக காட்சி கொடுத்த போட்டோக்கள் வெளிவராத பத்திரிகைகளே இல்லை. அந்த அளவுக்கு காதலில் உறுதிகாட்டினார்கள். காதலுக்கு கண் இல்லை என்பதால் காரணம் தெரியாமலே பிரிந்துவிட்டார்கள்.

பிரிவுக்கு பின்னால் இருவருமே தங்கள் தொழிலில் வேகம் காட்டினார்கள். ஜான் தயாரிப்பாளராக உருவெடுத்தார். ‘விக்கி டோனர், மதராஸ் கேப்போன்ற வெற்றிப்படங்களை தயாரித்தார். விக்கி டோனர் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். ‘உன்னுடைய பிரிவு என்னை ஒருபோதும் பாதித்ததில்லைஎன்று தன்னை புதுப்பித்துக்கொண்டார், ஜான். பிபாஷாவும் அதே வேகத்தில் நடித்து தன் மார்க்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டார்.

காதல் கசப்பதற்கு டாக்டர் சொல்லும் காரணம்

‘‘நம் மூளைப் பகுதியிலுள்ள புடாமேன், இன்சுலா போன்ற பகுதிகளே எரிச்சல், அவமானம், தோல்வி போன்ற உணர்வுகளை உணருகிறது. அன்பை உணர்த்துவதும் இதே பகுதிகள்தான். அனைவரிடமும் அன்பு காட்டும் பயிற்சியை நாம் ஆரம்பத்திலிருந்தே பெறவேண்டும். அந்த பயிற்சியின் மேம்பாட்டால்தான் காதலில் வெற்றிபெற முடியும். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் வெறுப்பு, கோபம், டென்ஷன் போன்ற உணர்வுகளுக்கு அடிமையாகி அதற்குதான் மூளையை பழக்கிவைத்திருக்கிறார்கள். அதனால் அன்பை பெறுவதிலும், அன்பை வெளிப்படுத்துவதிலும், விட்டுக்கொடுத்து வாழ்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. அன்பு ஜெயித்தால்தான் மனிதன் வாழ்க்கையில் ஜெயித்ததாக அர்த்தம். அன்பு ஜெயிக்காததால் காதல் தோற்கிறது’’ என்கிறார்கள்.

உலகம் முக்கால் பாகம் தண்ணீராலும், கால் பாகம் மனிதர்களாலும் நிறைந்திருக்கிறது. அதேபோல்தான் காதலும்! காதலின்  முக்கால் பாகத்தை பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன. அதை பக்குவமாக கையாண்டால்தான் கால் பாகமாவது வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.No comments:

Post a Comment