நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழ் நாட்டில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை ஆதரித்தது. சிரஞ்சீவி தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
சிரஞ்சீவி தற்போது திருப்பதியில் உள்ளார். உடனே டெல்லி வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது. இதையேற்று சிரஞ்சீவி நாளை டெல்லி செல்கிறார். காங்கிரஸ் செயலாளர் அகமதுபட்டேல், தமிழ் நாட்டுக்கான காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோரை அவர் சந்திக்கிறார்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்யுமாறு சிரஞ்சீவியிடம் கேட்டு கொள்ளப்படுகிறது. இதையேற்று சிரஞ்சீவி தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார். ஆந்திரா எல்லையை ஒட்டியுள்ள 35 தொகுதிகளில் சிரஞ்சீவி ஓட்டு கேட்பார். அவருக்கு தமிழும் நன்றாக தெரியும். இதனால் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார்.
சிரஞ்சீவி தனது கட்சியை அடுத்த மாதம் காங்கிரசுடன் இணைக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இன்றைய பதிவுகள்...
- தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிற...
- லிபியா மீது அமெரிக்க கூட்டுப் படையினர் விமானத் தாக...
- அமைச்சர் அன்பழகனின் சொத்து விவரம் :நம்புங்கப்பா எல...
- அ.தி.மு.க.வை எதிரியாக நினைத்து போட்டியிடுவோம்; நடி...
- தனிமைப்படுத்தப்படும் இளையராஜா....!!!
- நிறுத்திக்கொண்டார் சோனியா அகர்வால்!
- 13 மணி நேர பேச்சுவார்த்தை : அதிமுக -தேமுதிக உடன்பா...
- தேர்தலை புறக்கணிக்கிறோம் : வைகோ அதிரடி
No comments:
Post a Comment