உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணம் அடைய நடிகர் லாரன்ஸ் கட்டியுள்ள ராகவேந்திரா சுவாமி கோவிலில் 22.05.2011 அன்று காலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சிறப்பு பூஜையில் ராகவேந்திரா சுவாமி சிலைக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
கூட்டுப்பிரார்த்தனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் லாரன்ஸ்,
ரஜினி ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், ரஜினி நலமுடன் உள்ளார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் ரொம்பவும் நல்ல மனிதர். என்னுடைய ஆசிரமத்துக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. அதற்காகத்தான் இந்த கூட்டுப் பிராத்தனை.
மற்றப்படி ரஜினி நல்ல ஆரோக்கியமான உடல்நலத்துடன் உள்ளார். சமீபமாக லதா ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தப்போது, அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் நன்றாக இருப்பதாகவும், வீட்டில் சமைத்து எடுத்துக்கொண்டுபோகும் உணவுகளை சாப்பிடுவதாகவும் தெரிவித்தார். தவறான வதந்திகளை பரப்புவதால் எங்களைப் போன்ற ரஜினி ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அதனால் மருத்துவமனையின் முன் சென்று நிற்பதோ, மருத்துவமனைக்கு சென்று தொந்தரவு செய்வதோ கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், தவறான வதந்திகளை பரப்பும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
இந்த மந்திரத்தை கூட்டுப்பிராத்தனையின்போது சொல்லப்பட்டது. இந்த மந்திரத்திற்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. இந்த கூட்டுப்பிராத்தனையில் கலந்து கொள்ள இயலாதவர்கள், இந்த மந்திரத்தை ரஜினிக்காக வீட்டில் இருந்தப்படியே சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வேறு மதத்தை சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு எந்த கடவுளை பிடிக்குமோ, அந்த மத வழக்கப்படி ரஜினிக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
மேலும், தலைவர் ரஜினி பற்றி சிலர் தவறான வதந்திகள் பரப்பி வருகிறார்கள், அவர்கள் என் கண் முன்பாக வந்தால் அடித்துவிடுவேன் என்று கொஞ்சம் கோபமானார் ராகவா லாரன்ஸ்.
No comments:
Post a Comment