2001-ம் ஆண்டு செப்டம் பர் 11-ந்தேதி அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரங்களை தாக்கியது, உலகையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதன் மூளையாக செயல்பட்ட பின்லேடனை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதற்காக இமெரிக்கா கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கோணங்களில் அவனை தேடி வந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டான். அவன் தீவிரவாதி ஆன விவரம் வருமாறு:-
1957-ம் ஆண்டு சவுதி அரேபியாபில் முகமது ஆவாத் என்ற தொழில் அதிபரின் 52 பிள்ளைகளில் 17-வது குழந்தையாக பிறந்தான். இவனது தந்தை கட்டிடங்கள் கட்டும் நிறுவனத்தின் அதிபராக இருந்தார்.
* 1979: ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் நாடு படையெடுத்தது பின்லேடனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள முஜாஹிதீன் என்ற இயக்கத்துக்கு ஆதரவு அளிப்பதற்காக ஆப்கானிஸ்தான் வந்தான். அவர்களுக்கு பெரும் அளவில் பண உதவி செய்து சோவியத் படைகளோடு சண்டையிட வைத்தான். சில நாட்களில் தனது குழு வினரோடு சேர்ந்து “அல் கொய்தா” என்ற அமைப்பை ஏற்படுத்தினான்.
* 1989: ஆப்கானிஸ் தானத்தில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் ஆனதும் பின்லேடன் சவுதி அரேபியாவிற்கு திரும்பி தனது தந்தையின் நிறுவனத்தை கவனிக்கத் தொடங்கினான்.
* 1991: சவுதி அரேபிய அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி, அவனை சவுதி அரேபியாவில் இருந்து அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டான். சூடான் நாட்டில் தஞ்சம் புகுந்தான்.
* 1993: உலக வர்த்தக மையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு பின்லேடன் தான் காரணமாக இருக்கக் கூடும் என்று அமெரிக்கா சந்தேகம் கொண்டது.
* 1995: கென்யா மற்றும் தான்சானியா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அருகே குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 224 பேர்கள் உடல் சிதறி பரிதாபமாக செத்தார்கள். பலர் காயம் அடைந்தனர்.
* 1996: அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் வற்புறுத்தல் காரணமாக பின்லேடன் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டான். தனது மூன்று மனைவிகள் மற்றும் பத்து பிள்ளைகளுடன் ஆப்கானிஸ்தான் சென்ற பின்லேடன், அமெரிக்காவுக்கு எதிராக “ஜிகாத்” என்னும் புனிதப் போரை ஆரம்பிப்பதாக அறிவித்தான். பல்வேறு இடங்களில் சிறிய அளவில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி வந்தான்.
* 2001: இவன் நடத்திய தாக்குதல்களில் மிகவும் மோசமான தாக்குதலை நடத்துவதற்கு மூளையாக இருந்து அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்களையும், “பென்டகன்” எனப்படும் அமெரிக்க ராணுவப் படையின் தலைமையிடத்தையும் தகர்த்தான். அவனது தாக்குதலால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த சதி செயல்களுக்கு காரணமாக பின்லேடனை அழித்து விட வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்கா தீவிரம் காட்டி வந்தது.
* 2003: அல்அஜிரா தொலைக்காட்சியில் இரண்டு முறை தோன்றிய பின்லேடன் உலக நாடுகளில் உள்ள முஸ்லீம்கள் தங்களிடம் உள்ள வேறுபாட்டை மறந்து விட்டு, தனது புனித இயக்கத்தில் சேரும்படி அழைப்பு விடுத்தான்.
* 2004: ஆப்கானிஸ் தானத்தில் ஒளிந்திருக்கும் பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்கா தீவிரம் காட்டியது.
* 2011: பாகிஸ்தானின் தலைநகரமாகிய இஸ்லாமாபாத்திற்கு வெளியே ஒரு இடத்தில் அமெரிக்க படையால் பின்லேடன் கொல்லப்பட்டான்.
இன்றைய செய்திகள்...
- கொல்லப்பட்ட பின்லேடனின் புகைப்படம் போலியானது! ; அப...
- ஒசாமா 'புண்ணியத்தால்' ஒபாமா செல்வாக்கு உயர்வு!
- 'ஒசாமா கொல்லப்பட்டது எப்படி?' நேரடி காட்சிகள்
- தள்ளிபோகிறது வேலாயுதம்: வருத்தத்தில் விஜய் ரசிகர்க...
- என்ன செய்யப் போகிறார் அஜீத்?
- பொன்னியின் செல்வனா? புதுமுக வேட்டையா? -அலைபாய வி...
- அப்பாடா ஒருவழியா புது பெயர் வச்சிடாங்க !
- ஒசாமாவை கண்டுபிடித்தது கொன்றது எப்படி? ; திக்... த...
- பின்லேடன் தீவிரவாதி ஆனது எப்படி?
- ஐ.நா. சபையின் போர் குற்ற விசாரணையை ஏற்க ராஜபக்சே ம...
- ஊன்று கோலுடன் நடக்கும் நடிகர் அஜீத்
- ஒசாமா பின் லேடன் சாவு- வீடியோ
- பின்லேடன் உடலை கடலில் வீசியது அமெரிக்கா!!
- ஒசாமா மரணத்தால் வெளுத்த பாகிஸ்தான் சாயம்
- பின்லேடன் பலி-அல்கொய்தா அணு குண்டு வீசுமா?
- அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி...
- யார் இந்த ஒசாமா பின் லேடன்?-ஒரு பார்வை ; அரிய புகை...
- கொள்ளைக்கார முதல்வர்களின் சொத்து விபரங்கள் - பட்டி...
- பின்லேடனை கொன்ற ‘சிஐஏ’ - சில குறிப்புகள்
- பர்தாவிற்கு மாறினார் நடிகை அசின்
- சந்திரபாபு நாயுடு மீது கல்வீசி தாக்குதல்; பெண்கள் ...
- சிறுவன் மனித வெடிகுண்டாக வந்து தாக்குதல்
- ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார்; அமெரிக்கா மீது அண...
- நடிகர் சிவராஜ்குமாரின் தலையில் அலங்கார தூண் விழுந்...
- இலங்கைக்கு மின்சாரம் அனுப்பினால் போராட்டம் : பாஜக
No comments:
Post a Comment