இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டடத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.
இலங்கையின் போர்க்குற்றம் குறி்த்த ஐ.நா நிபுணர் குழு அறிக்கை, சேனல் 4 தொலைக்காட்சியின் வீடியோ ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் இங்கிலாந்து தொழிலாளர் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் கூறுகையில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நாங்கள் பிரகடனப்படுத்தியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எங்களுக்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தமிழர்களின் அரசுக்கு கிடைத்துள்ள மறைமுக அங்கீகாரமாகவே கருதுகிறோம் என்றார்.
தெற்கு சூடான் அழைப்பு:
இந் நிலையில் சமீபத்தில் சூடானிலிருந்து வாக்கெடுப்பு மூலம் பிரிந்த தெற்கு சூடான் நாட்டின் முக்கிய அரசியல் அமைப்பான சூடான் மக்கள் விடுதலை இயக்கம், நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் நிர்வாகிகளை தங்கள் நாட்டுக்கு அழைத்துள்ளது.
சூடானிலிருந்து விடுதலை வாங்க பேராடிய முக்கிய இயக்கம் இது. போர், கொடுமைகள் என இலங்கையில் தாங்கள் சந்தித்த இன்னல்களை தமிழர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது குறித்து இந்த இயக்கத்துக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் நிர்வாகிகள் விளக்குவர்.
கிட்டத்தட்ட வடக்கு இலங்கைப் பகுதியைப் போன்ற ஒரு கொடூரமான நிலையில் தான் தெற்கு சூடானும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment