சிம்பு, ஜெய் இணைந்து நடித்து வரும் படம் 'வேட்டை மன்னன்'. இப்படத்தை 'ஜோடி நம்பர் 1' இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். நிக் ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் ஒரு கேங்ஸ்டராக நடிக்கிறாராம் சிம்பு. அவருக்கு நண்பனாக நடிக்கிறார் ஜெய். நாயகியாக தீபிகா ஷேத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சில ஆயிரங்களுக்கு கொலை செய்து கொண்டு இருந்தவன் எப்படி மில்லியனில் பணம் வாங்குற பெரிய கேங்ஸ்டராக மாறுகிறான் என்பது தான் படத்தின் கதையாம்.
கதைப்படி சிம்பு தன்னுடைய உயிர் நண்பனுக்காக பழிக்குப்பழி வாங்க களத்துல இறங்குவார். இந்தப் பழிக்குப்பழி முயற்சி எப்படி பெரிய வில்லங்கமாக மாறுகிறது என்பதுதான் திரைக்கதை. அந்த நண்பன் கதாபாத்திரத்துக்கு இன்னொரு ஹீரோ அவசியம். அதனால் தான் ஜெய் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம்.
முதல் பாதி தமிழ்நாட்டிலும் இரண்டாம் பாதி பிரேஸில் நாட்டிலும் நடக்கிறதாம் கதை. பிரேஸில் நாட்டில் இதுவரை திரையில் பார்க்காத புதுப்புது லொகேஷன்களிலும் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்களாம்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டை காட்சிகளில் ரோப் எதுவும் இல்லாமல் நடிக்க இருக்கிறாராம் சிம்பு.

No comments:
Post a Comment