கமலுக்கும் ஏவிஎம் க்குமான தொடர்பு இறுக்கி பிணைக்கப்பட்ட விஷயம். களத்து£ர் கண்ணம்மாவில் தொடங்கி எத்தனையோ படங்கள் அவர் ஏவிஎம் நிறுவனத்திற்காக நடித்திருந்தாலும், அந்த ஸ்டுடியோ வளாகத்தில் அமைந்திருக்கிற கொய்யா மரத்திற்கும் இவருக்குமான தொடர்புதான் இன்னும் இன்னும் நெருக்கம்.
சிறுவயதில் படப்பிடிப்புக்கு போகும் கமல், அங்கேயிருக்கும் இந்த கொய்யா மரத்தில் ஏறி பழம் பறித்து உண்பாராம். ஆச்சர்யம் என்னவென்றால் இப்போதும் அந்த மரம் அங்கிருக்கிறது.
ஒவ்வொரு சீசனிலும் அது பழுக்கும்போது ஏராளமான பழங்களை கமல் வீட்டுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறது இந்நிறுவனம். அதியமானின் நெல்லிக்கனி மாதிரி ஏவிஎம் மின் இந்த கொய்யாக் கனியையும் வெறும் பழமாக பார்ப்பதில்லை கமல்.

No comments:
Post a Comment