உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் 14 வயது சிறுமி போலீஸ் நிலையத்தில் கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு மீண்டும் ஒரு கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கன்னூஜ் மாவட்டம் குர்புர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி. 14 வயதான அவளை அந்த கிராமத்தைச் சேர்ந்த குல்தீப், நிரஞ்சன் ஆகியோர் கற்பழிக்க முயன்றனர். இதை தடுக்க சிறுமி போராடினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சிறுமியின் கண்களை கத்தியால் குத்தி கற்பழித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் அந்த சிறுமியின் இடது கண் பார்வை பறிபோனது. வலது கண் அதிகமாக சேதம் அடைந்து உள்ளது.
இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய மறுத்த சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment