டெல்லி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தானே முன்வந்து தனது சொத்து விவரத்தை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் அர்ச்சனா தத்தா கூறுகையில்,
குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலிடம் யாரும் சொத்துக்கணக்கை அறிவிக்கும் படி கோரவில்லை. அவராகவே முன்வந்து, தனது சொத்துக்கணக்கை விரைவில் வெளியிட முடிவு செய்து இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான அலை படு வேகமாக வீசி வருகிறது. ஊழல்வாதிகளைத் தண்டிக்கும் வகையிலான லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் விசாரிக்க வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது சொத்து விவரத்தை அறிவிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவரின் சொத்து விவரங்களை யாரும் கேட்க முடியாது. கூறுமாறு கோரவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment