முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று 2வது நாளாக நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் தொகுதி பேட்டைவாய்தலை பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி கூறினார் ஜெயலலிதா. அப்போது தொண்டர்கள் கொளுத்திய பட்டாசு வெடித்ததில் அருகில் இருந்த கடை தீப்பிடித்தது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
காவல்துறை வேகமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பதற்றம் தணிந்தது.

No comments:
Post a Comment