ஆர்யா, விஷால் நடிப்பில் பாலா இயக்கத்தில் நேற்று ( ஜூன் 17 ) வெளியாகி இருக்கும் படம் 'அவன் இவன்'. இப்படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்து இருக்கிறார்.
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து விஷால் கூறியுள்ளது " இப்படத்தின் முதல் ஷெட்டியூல் முடிந்து இரண்டாம் ஷெட்டியூல் ஆரம்பித்தவுடன் இயக்குனர் பாலா என்னை தனியாக ஒரு ரூமிற்குள் அழைத்தார்.
ரொம்ப நேரம் யோசித்தவர் "இந்தப் படத்தில் நீ ஒரு மாறுகண் உடையவனாக நடிக்க வேண்டும்" என்று கூறினார். நான் சென்னை வந்து டாக்டரிடம் போய் விவரத்தை கூறினேன். எல்லாரும் மாறு கண்ணை சரி செய்ய வருவார்கள் நீ என்னவென்றால் மாறு கண் வேண்டும் என்று வந்து இருக்கிறாய் என்று சிரித்தார் டாக்டர்.
படங்களில் யாராவது மாறு கண் உடையவராக நடித்து இருக்கிறார்களா என்று இண்டர்நெட்டில் தேடினேன் ஆனால் ஒரு படம் கூட கிடைக்கவில்லை. இனிமேல் யாராவது மாறு கண் உடையவராக நடிக்க வேண்டும் என்று நினைத்தால் எனது படத்தை தான் பார்க்க வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் வரை மாறு கண் உடையவராக இப்படத்தில் நடித்து இருக்கிறேன். இந்த படத்தில் எனக்கு உறுதுணை என்றால் எனது நண்பன் ஆர்யா தான். அவனுக்கு தான் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று தெரியும்.
இந்த படத்தில் ஒரு காட்சிக்கு பாலா தண்ணி அடிக்க வேண்டும் என்று கூறினார். நான் காட்சிக்காக தண்ணி அடித்து விட்டு நடித்தேன். நான் என்ன வசனம் பேசினேன்.. எப்படி நடித்தேன் என்றே தெரியவில்லை. படத்தின் டப்பிங் பேச போன போது தான் அந்தக் காட்சி நன்றாக அமைந்து இருந்தை பார்த்தேன்.
படத்தில் வரும் முதல் பாடலில், படம் பார்க்கும் எல்லாரும் என்னை அதிசயமாக பார்ப்பார்கள்.
இந்த மாதிரி ஒரு பாத்திரத்தில் இனிமேல் பத்து கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன். ஏன் பாலாவே இனிமேல் இது மாதிரி ஒரு ரோல் கொடுத்தால் கூட நடிக்க மாட்டேன்." என்று கூறியுள்ளார்.
'அவன் இவன்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சென்னையில் 17 தியேட்டர்களிலும் தமிழ்நாட்டில் மொத்தம் 350 தியேட்டர்களில் இப்படம் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து காட்சிகளுக்கும் பல தியேட்டர்களில் அனைத்து டிக்கெட்டுகளும் புக் ஆகிவிட்டது.
இந்நிலையில் துபாயில் நேற்று படம் பார்த்தவர்கள் டிவிட்டர் இணையத்தில் " இப்படத்திற்காக அடுத்த வருடம் கண்டிப்பாக விஷாலுக்கு தேசிய விருது நிச்சயம் " என்று விஷாலின் அண்ணியான ஸ்ரேயா ரெட்டிக்கு டிவிட் செய்து வருகிறார்கள்.

No comments:
Post a Comment