தமிழ்சினிமாவில் கடைசி பெஞ்ச் அழகிகள் என்று சிலர் இருப்பார்கள். ஹனிரோசும் அப்படிப்பட்டவர்தான். முதலில் விக்ராந்த் நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். படத்தின் பெயரே நினைவில் இல்லாதளவுக்கு ஓடியது அப்படம். அதன்பின் சுதாரித்துக் கொண்ட ஹனிரோஸ், தனது பெயரை சவுந்தர்யா என்று மாற்றிக் கொண்டு நடித்த படம்தான் காந்தர்வன். படம் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறதே தவிர ஒரு முடிவுக்கு வரவில்லை. அட... பெயர் மாற்றம் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் போலிருக்கிறதே என்று மீண்டும் ஹனி ரோஸ் ஆகிவிட்டார்.
சிங்கம்புலி படத்தில் ஒரு ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த இவரை பாதியிலேயே கொன்றுவிட்டது திரைக்கதை. அப்படியும் நம்பிக்கையோடு போராடியவருக்கு கிடைத்த படம்தான் மல்லுக்கட்டு. தனுஷின் தம்பி முறை உறவுக்காரரான வருண் என்பவர்தான் ஹீரோ. விக்ரமிடம் உதவி இயக்குனராக இருந்த முருகானந்தம் இயக்கியிருக்கிறார்.
போராட்டம் என்ற வார்த்தையின் எளிமைதான் மல்லுக்கட்டு. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விஷயத்துக்காக வாழ்க்கையோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தன் காதலுக்காக மல்லுக்கட்டும் ஜோடியின் கதைதானாம் இது.
தனுஷ் பெற்ற வெற்றியை தன் பிள்ளைக்கும் தந்துவிட வேண்டும் என்று பணத்தை தண்ணீராக இரைத்துக் கொண்டிருக்கிறாராம் கஸ்து£ரிராஜாவின் சகோதரர். என்னதான் தனுஷை முந்தினால் கூட ரஜினிக்கு மருமகன் ஆக முடியாது சார்....

No comments:
Post a Comment