செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிக்கும் படம் ‘வித்தகன்’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் பார்த்திபன். அவர் ஜோடியாக பூர்ணா. வில்லனாக மிலிந்த் சோமன் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்த நிலையில் இப்போது வியன்னாவில் பாடல் காட்சியை படமாக்கி விட்டு திரும்பியுள்ளனர். இதுபற்றி பட யூனிட்டில் விசாரித்தபோது கூறியதாவது: படம் ஏற்கனவே முழுவதும் முடிவடைந்த நிலையில் பாடல் காட்சிகள் மட்டும் பாக்கியிருந்தது. அதற்காக, பார்த்திபன், பூர்ணா உட்பட பட யூனிட் வியன்னா மற்றும் செக் குடியரசு நாடுகளுக்குச் சென்று வந்துள்ளது. அங்கு இதுவரை தமிழ்ப் படங்களின் ஷூட்டிங் நடக்கவில்லை. புதுமையான லொகேஷன்களில் பாடல்கள் படமாக்கப்பட்டுள்ளன. இதோடு படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது எடிட்டிங் பணி நடந்து வருகிறது. அடுத்த மாத இறுதி அல்லது ஆகஸ்டில் படம் ரிலீஸ் ஆகும்.

No comments:
Post a Comment