விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, June 19, 2011

    தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட மேம்பாலங்களின் வழியாகத்தானே ஜெயலலிதா செல்கிறார் -கருணாநிதி


    தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

    ஓமந்தூரார்  எனப்படும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் - புதிய சட்டமன்ற மாளிகையும், அதையொட்டிய வளாகமும் அவருடைய நினைவைப் போற்றும் வகையில் "ஓமந்தூரார் வளாகம்'' எனப் பெயரிட்டு அழகுறக் கட்டிமுடிக்கப்பட்டது. "பப்ளிக் ப்ளாசா''வில் நீண்டதொரு தண்ணீர் தொட்டியும் அமைக்கப்பட்டு - நூற்றுக்கணக்கான வண்ண மீன்கள் அந்தத் தொட்டியில் நீந்தி விளையாடுவதை - அந்தப் பகுதிக்கு வரும் பள்ளிச் சிறார்களும், ஆண்களும், பெண்களும் கண்டுகளிக்கும் காட்சி அந்தக் கட்டிடத்திற்கே தனிப்பெரும் மாட்சியாக விளங்கியது.

    இந்தப் பெரிய கட்டிடத்தின் எல்லாப் பணிகளுமே ஜுன் 30ந்தேதிக்குள் முடிவடையும் என்பதையும் அரசின் சார்பிலேயே அறிவிக்கப்பட்டது. ஓமாந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகக் கட்டிடம் என்னுடைய சொந்தப் பணத்திலே கட்டப்பட்டது அல்ல. அதைக்கூட சில பத்திரிகைகளில் ரூ.1200 கோடி செலவழித்துக் கட்டப்பட்ட கட்டிடம் என்று எழுதுகிறார்கள்.

    தற்போது கட்டி முடிந்துள்ள கட்டிடத்திற்காக திட்டமிடப்பட்ட தொகை ரூ.623 கோடியே 99 லட்சம். அதிலே செலவு செய்யப்பட்டது ரூ.479 கோடியே 50 லட்சம். கட்டப்பட்டு வருகிற பிளாக் "பி'' கட்டிடத்திற்கான மதிப்பு ரூ.279 கோடியே 56 லட்சம். இதிலே செலவாகியுள்ள தொகை ரூ.72 கோடியே 30 லட்சம். எனவே ரூ.1200 கோடி செலவழிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு!   செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இந்திய ராணுவமும் இருப்பதால் பாதுகாப்பு காரணமாக பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியாத ஒரு நிலை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

    மேலும், அங்கே உள்ள கட்டிடங்களில் ஏதாவது மாறுதல் செய்ய நேரிட்டால்கூட, - ஏன், அங்கே இருக்கும் புல்லைச் செதுக்கி அகற்றுவதற்குக் கூட - இந்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கிறது. வேறு சில அரசு அலுவலகங்கள் நகரின் வெவ்வேறு இடங்களில் இயங்கி வருவதால் அதன் காரணமாக "வாடகை'' என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு தொடர்ந்து செலவு ஏற்படுகிறது என்பதாலும்; அனைத்து அலுவலகங்களும் அமையக்கூடிய விதத்தில் புதிய இடத்தை அ.தி.மு.க. அரசு முதலில் தேடி வந்தது.

    சென்னை கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா பூஜை - புனஸ்காரங்களோடு நடைபெற்று, அன்றைய முதல் அமைச்சரான ஜெயலலிதாவே அதிலே கலந்து கொண்டார். சென்னை கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது முடிவெடுத்தார்.

    நிதி நெருக்கடி அரசுக்கு இருந்தாலும், தொலைநோக்குப் பார்வையோடு புதிய தலைமைச் செயலகத்தை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைப்போம் என அப்போது அ.தி.மு.க. அரசு தெரிவித்தது. சட்டப் பேரவையில் ஜெயலலிதாவால் அப்போது அறிவிக்கப்பட்டபோதே, "தற்போதைய தலைமைச் செயலகம் தகுதிவாய்ந்ததாக இல்லை. ராணி மேரி கல்லூரி கட்டிடங்கள் மோசமான நிலைமையில் உள்ளன. அதை இடிக்க வேண்டும்.

    புதிய தலைமை செயலக வளாகம் அவசியம்.'' என்றெல்லாம் கூறப்பட்டது. அந்தக் கருத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் - தி.மு.க. ஆட்சியில் கட்டி 14-8-1975 அன்று திறந்து வைக்கப்பட்ட - நாமக்கல் கவிஞர் மாளிகையில், பல இடங்களில் விரிசல் விழுந்துள்ளது என்றும், கசிவு ஏற்படுகிறது என்றும், எனவே கோட்டையில் இருந்து உடனடியாக தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அப்போது ஜெயலலிதா கூறினார்.

    அதையெல்லாம் மனதிலே கொண்டு தி.மு.க. ஆட்சியிலே புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜெயலலிதா அந்தப் புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்து விட்டு, பழைய தலைமைச் செயலகத்திலேயே தான் இருப்போம், நாமக்கல் கவிஞர் மாளிகையை புனருத்தாரணம் செய்யப்போகிறோம் என்றெல்லாம் ஆரம்பித்திருப்பது விதண்டாவாதம்; வெறுப்பினாலும், காழ்ப்புணர்ச்சியாலும் ஏற்பட்ட விளைவு; என்பதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். 

    தற்போது புதிய தலைமைச் செயலகத்திற்கு இடம்மாறிய பிறகு; தலைமைச் செயலகத்தை, பழைய இடத்திலேயே தொடர்ந்து நடத்துவோம் என்றும்; புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்தமாட்டோம் என்றும் கூறி, அங்கே வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை எல்லாம் பெயர்த்தெறிகின்ற பணியிலே அரசு ஈடுபட்டுள்ளது. ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள கட்டிடம் தி.மு.க. ஆட்சியிலே கட்டப்பட்டது என்பதுதான் அவரது வெறுப்புக்கு ஒரே காரணமாக இருக்க முடியுமென்றும், நிர்வாக வசதி இல்லை என்றெல்லாம் கூறுவது அவரது உள்மனதில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வை மறைப்பதற்காகத்தான் என்பதும் நன்றாகப் புலனாகிறது.

    தி.மு.க. ஆட்சியிலே எழுப்பப்பட்ட நாமக்கல் கவிஞர் மாளிகையை மட்டும் புனருத்தாரணம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாமா? தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மேம்பாலங்களின் வழியாகத்தானே ஜெயலலிதாவின் கார் செல்லுகிறது! கருணாநிதி கட்டிய மேம்பாலம், அதிலே நான் பயணம் செய்யமாட்டேன் என்று நிறுத்திவிட்டாரா என்ன?   டெல்லி சென்றபோது அவசரஅவசரமாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தை சீர்படுத்தி அங்கே சென்று தங்கினாரே; நான் கட்டிய கட்டிடம் என்பதற்காக அங்கே போகாமலா இருந்துவிட்டார்.

    கோபம் என் மீதுதானே தவிர; நான் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் என்ன "பாவம்'' செய்தது? எனவே முதலமைச்சர் பொறுப்புக்கு மூன்றாவது முறையாக வந்துள்ள ஜெயலலிதா இனியாவது, அரசியலில் பக்குவப்பட்ட ஒரு தலைவராக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். தி.மு.க. ஆட்சி செய்ததையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது என்பது அவர் இருக்கும் பதவிக்கு அழகல்ல. எந்தவிதப் பெருமையையும் சேர்க்காது. மக்களின் வரிப் பணத்தைச் செலவழித்து கட்டப்பட்ட கட்டிடங்களை வேண்டாமென்று கூறுவது தன்னிச்சையான போக்கு மட்டுமல்ல;

    மக்களையே அவமதிப்பதாகும். அவர்களே கூறிய கசிவு ஏற்பட்டுள்ள, விரிசல் உள்ள கட்டிடத்திற்கு தலைமைச் செயலகத்தை மாற்றி, அதன் பிறகு அங்கே ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால், அதற்கு முழு பொறுப்பையும் புதிய ஆட்சியாளர்கள்தான் ஏற்க வேண்டும். சட்டப்பேரவை மண்டபத்தை மீண்டும் மாற்றுவதால் செம்மொழி ஆய்வு மையத்தின் நூலகத்தை தேவையில்லாமல் மாற்றியிருக்கிறார்கள். இது தமிழுக்குச் செய்யப்பட்ட நன்மையல்ல. புதிய அரசு நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு நலத்திட்டங்கள், மக்களுக்கு ஆற்றிட வேண்டிய முக்கிய பணிகள் ஏராளமாக இருக்கும்போது தலைமைச் செயலகத்தை மாற்றுவதில் அரசு இயந்திரத்தின் முழுக் கவனத்தையும் செலவழிப்பது வீண் வேலை, தனி மனிதர் ஒருவரின் பிடிவாதத்திற்காக அரசு நிர்வாகத்தைத் திசைதிருப்பும் செயலாகும். 

    புதிய தலைமைச் செயலகம் தமிழக அரசுக்குச் சொந்தமான இடம். அனைத்து அலுவலகங்களையும் ஒரே இடத்தில் அமைத்திட முடியும். ஆனால் பழைய தலைமைச் செயலகம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. காலத்தின் மாற்றத்திற்கேற்ற நிர்வாகத் தேவைகளை அங்கே நிறைவு செய்திட முடியாது. தமிழக அரசுக்குச் சொந்தமான புதிய இடத்தை விட்டுவிட்டு, வேண்டுமென்றே பழைய இடத்திற்கு போவது என்பது முறையான நிர்வாகச் செயல்பாடு அல்ல.

    ஆட்சிகள் மாறும்போது சில திட்டங்கள், சட்டங்கள் மாறலாமே தவிர; அடிப்படையில் முந்தைய ஆட்சி செய்த மக்கள் நலத்திட்டங்களையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என்பது ஓர் ஆட்சி மாற்றத்தின் நெறிமுறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இத்துடன் நிறுத்துகிறேன். இதற்கு மேல் நான் எதுவும் எழுதத் தேவையில்லை என்று கருதுகிறேன். பகுத்தறிந்து பார்க்கும் - பழக்கமும் தெளிவும் தமிழ் மக்களுக்கு அறவே அற்றுப்போய்விட்டதாக நான் கருதவில்லை. அந்த நம்பிக்கையின் ஒரு துளிதான் இந்த அறிக்கை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    Posted by விழியே பேசு... at 9:40 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ▼  June (616)
      • பிரான்ஸ் அதிபர் சார்கோசி தாக்கப்பட்டார்
      • இலங்கையில் கொடூர சித்திரவதை-தாயகம் திரும்பிய மீனவர...
      • தமிழர்களை ஏமாற்றாதீர்கள் மன்மோகன்-நெடுமாறன் எச்சரி...
      • பொன்சேகாவுடனான மோதலுக்கு 'ரா' தான் காரணம்- ராஜபக்சே
      • ராஜபட்சேவுக்கு எதிராக சீமான் தேர்தலில் போட்டியிடலா...
      • உதயன் நாயகி விஜய்யுடன் இணைகிறாராம்!
      • வேங்கையை வாங்கிய திமுக விவிஐபி
      • ராணாவில் வடிவேலு இருக்காரா? கே.எஸ்.ரவிகுமார் பதில்
      • விஜய்யிடம் விசேஷ மாற்றம்?
      • விரைவில் 'சுகோயில்' பறக்கவிருக்கும் சச்சின், டோணி
      • அரசியல்வாதிகளெல்லாம் வெளியே போங்கப்பா- ஐசிசி அதிரடி!
      • ஸாரி, இன்னிக்கு ரீசார்ஜ் கிடையாது!
      • உப்பு என்ற போர்வையில் 10,000 கிலோ வெடிபொருள் கடத்தல்!
      • 2ஜி ஊழல்-அப்ரூவராவாரா கனிமொழி?
      • பிரதமரை சந்தி்த்தார் தயாநிதி மாறன்: பதவியை ராஜினாம...
      • சீனாவின் ஒப்பிடுகையில் நாம் சுண்டைக்காய்- மன்மோகன்
      • ''அஜீத் பற்றி ரகசியம் சொல்லவா?''
      • திரைப்படங்களை மிஞ்சிய காதல், சென்டிமென்ட்,ஆக்ஸன் க...
      • திருமண 'பாண்டில்' இணைந்த ஜேம்ஸ் பாண்ட்!
      • நடிகை அனுஷ்கா சர்மாவிடம் சுங்க அதிகாரிகள் அதிரடி வ...
      • இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா
      • ரஜினியின் 'அழைப்புகள்'!!
      • மொட்டை மாடியில் தேன்நிலவு! - செல்வராகவன்
      • பாலாவுக்கு இஸ்லாமியர்கள் கண்டனம்!
      • சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
      • மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வீடியோ ஆதாரங்களுட...
      • மகனை நினைத்து கதறி அழும் கனிமொழி!
      • மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தந்தது தப்பு!...
      • காங்கிரஸுக்குக் கொடுத்த ஆதரவு முடிந்து விட்டது -ஜெ...
      •  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சமச்சீ...
      • பிரபாகரனுடன் சேர்ந்து இலங்கைக்கு துரோகம் செய்தார் ...
      • 'சண்டை' போடாதீங்க-ரஜினிக்கு டாக்டர்கள் அட்வைஸ்!
      • தர்மஸ்தலாவில் சாமி முன்பு சத்தியம் செய்தார் குமாரச...
      • அப்துல்கலாம் கொடுத்த புத்தகம் : நடிகர் விவேக்
      • இலங்கை தமிழர்களுக்காக பதவியை துறந்தேன் : டி.ராஜேந்தர்
      • இந்திய அரசு எனக்கு விருது தர வேண்டும் : நாஞ்சில் ச...
      • விஜய் பட தயாரிப்பாளர் கைது
      • ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்- மதிமுக மாநாட்டில் தீர...
      • மசோதாக்களை உருவாக்குவதில் இனி மக்கள் பிரதிநிதிகளுக...
      • ரஜினியை காப்பி அடிக்கவில்லை- நஸ்ருதீன் ஷா
      • ஹர்ஷிகாவின் இரு கண்கள்!
      • இஃபா விழாவில் ரஜினியின் ரோபோட்டுக்கு 3 விருதுகள்
      • கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வ...
      • 'அதப் பத்தி எழுதாதே': நிருபர்களுக்கு ஆசின் டோஸ்!
      • அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்- தயாநிதி மாறன் நீக்...
      • ஸ்டாலினுக்கு வயதாகி விட்டது, தமிழகத்தின் அடுத்த மு...
      • சாய்பாபா ஆசிரமத்தில் கொள்ளை புட்டபர்த்தி மக்கள் போ...
      • வெளியூர்களில் 1-ந்தேதி முதல் மின்வெட்டு 3 மணியில் ...
      • வாஸ்துவாவது, மாற்றமாவது... ரஜினி வீட்டு செய்தியில்...
      • ஜெயலலிதாவுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
      • பிரபுதேவாவைச் சந்திக்காமல் விரதமிருந்த நயன்தாரா!
      • காவல் நிலையத்தில் 'கலாட்டா' செய்த தேமுதிக எம்எல்ஏ:...
      • சீமானுக்கு ஆப்ப்பு : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வ...
      • தனுஷின் புதிய அவதாரம்!
      • ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை
      • இலங்கை அரசை கட்டாயப்படுத்துங்கள்: இந்தியாவுக்கு சர...
      • முதல்- அமைச்சரின் காரை நிறுத்தி வாழ்த்து கூறிய மாண...
      • நடிகர் தனுஷ் நடித்த வேங்கை படத்துக்கு இடைக்கால தடை
      • சிம்புவை இந்தியில் அறிமுகப்படுத்த துடிக்கும் கெளதம்
      • வரிச்சலுகை உண்டா இல்லையா?
      • ''புதிய அலைகள்'' அணியின் வெற்றி!
      • ரஜினி நலம்... ரசிகைகள் நேர்த்திகடன்
      • ஒசாமாவின் கடைசி கடிதம் !
      • முன்னாள் காதலி ஐஸ்வர்யாராய்க்கு வாழ்த்து சொன்ன சல்...
      • தொடரும் விஜயகாந்தின் ரௌடிசம் : மகனுக்கு சீட் மறுப...
      • பின்லேடனின் செல்போன்கள் மூலம் பின்லேடன்- ஐஎஸ்ஐ தொட...
      • வாலியுடன் விஜயகாந்த் சந்திப்பு அரசியல் ஆலோசனைகளா?
      • மகனுக்கு வீடு வாங்க கடன் வாங்கிய சச்சின்!
      • சென்னை திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!
      • மகனுக்கு கொலை மிரட்டல்: அவசரமாக மதுரை திரும்பிய அழ...
      • ரஜினி வழியில் விஜய்!
      • கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா!
      • பாடல் ஆசிரியரான லாரன்ஸ்!
      • ரஜினிகாந்த் வீடு வாஸ்து சாஸ்திரப்படி புதுப்பிக்கப்...
      • 12ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்
      • பறக்கும் படை : நடிகர் விவேக் அதிரடி
      • 'மங்காத்தா' ரிலீஸ் தியதி !
      • விஜய்யை அடுத்து இயக்குவது யார்? : விஜய் பதில்
      • வெற்றி ‌தோல்வி என்னை பாதிக்காது: ஹாரிஸ் ஜெயராஜ்!
      • செங்கடல்: கட் இல்லாமல் அப்படியே அனுமதித்த ட்ரிப்யூ...
      • அஜித்தின் புதிய அவதாரம் பில்லா
      • போதையில் பெண்களிடம் எஸ்ஐ சில்மிஷம்-தப்பவிட்ட போலீசார்
      • பாலா படத்தில் நடிக்க ஆசை: சோனியா அகர்வால்!
      • கிருஷ்ண லீலை தாமதம்! கண்ணீர் வடிக்கும் டைரக்டர்!!
      • ஹன்சிகாவின் தொழில் பக்தி!
      • கமலுடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் மற்றொரு பாலிவுட் நட...
      • அஜீத் முத்தம் தர மறுக்க நான் என்ன பேயா பிசாசா? - த...
      • ஜூலை 15ல் பிரசாந்தின் மம்பட்டியான்!
      • ஜாகீர் கானுடன் என்ன உறவு...? இஷா சர்வானி விளக்கம்!
      • அமலா பால்க்கு அக்காவான சமீரா!
      • நடிகர் கார்த்தி திருமணம்! கோவையில் 3ம்தேதி நடக்கிற...
      • மீனவர்களுடன் இணைந்து போராட்டம்- சீமான்.
      • இராமாயண வாலியா ரஜினி?
      • அது ரஜினி எழுதிய கடிதமா? சந்தேகம் கிளப்பும் பிரமுக...
      • மனிதனாக இரு சல்மான்கான்
      • அவன் இவன்.... வசூலில் சாதனை!
      • கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி
      • கோவிலில் சத்தியம் செய்யும் விவகாரம்: எடியூரப்பா பி...
      • 'பிரபாகரனின் குடும்பம்'.. தப்பா சொல்லிட்டேன்! - மன...
      • சொத்துகள் பறிபோனால் என் செய்வது : சிறையில் மெழுகுவ...
      • ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது...
      • இது தாண்டா ரஜினி ! ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு...
      • போர்க்குற்ற அறிக்கை: ஐநாவுக்கு இலங்கை அளித்த ரகசிய...
      • 3 மாதத்தில் அரசு கேபிள் டிவி: ஜெ திட்டம்!!
      • கருணாநிதிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஜெயலலிதா
      • நடிகர் வடிவேல் மீண்டும் அடிவாங்கியுள்ளார்: மா.கம்யூ.
      • காதலிக்கு 60 வயது: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கி த...
      • காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள உறவு எப்படி ...
      • பொதுமக்களுக்கு அவஸ்தையை கொடுத்த விஜய் பிறந்தநாள் (...
      • விஜய்யைப் பற்றிய சில தகவல் துளிகள்
      • கனிமொழிக்கு தனி அறை!
      • பாடலாசிரியர் ஆனார் தனுஷ்
      • ராணாவில்தீபிகா படுகோனேவுடன் டூப் ரஜினி ? வெளிவரும...
      • ரஜினியின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள் ர...
      • பஞ்சு-70: ரஜினி, கமல் வாழ்த்து!
      • சாய்பாபா ஆசிரமத்தில் பல கோடி கொள்ளை...
      • பிரபாகரன் மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள் : இல...
      • லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் சேர்க்க வேண்டும்-த...
      • ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்-அமிதாப்பச்சன் தகவல்
      • 'இத யார் கிட்ட போய் சொல்லுறது' ; எடியூரப்பா -குமா...
      • படுக்கை அறை காட்சியை படம் பிடித்தவர்கள் கைது
      • கதாநாயகன் ஆகும் சிவாஜிகணேசனின் பேரன்
      • என்னா பெரிய பொய்யி.... ஜெ ரூ.9 லட்சம், கருணாநிதி ர...
      • மலேசியாவில் எம்ஜிஆர் சிலை: திறந்து வைக்கிறார் சத்ய...
      • அமிதாப் உடல்நிலை திடீர் பாதிப்பு!
      • ரஜினியை சிங்கப்பூரில் சந்தித்து நலம் விசாரித்த பிர...
      • கமல் படம்: கதக் ஆட வராததால் ஸ்ரேயாவுக்கு கல்தா?
      • ரகசிய கேமராக்கள்-மைக்ரோபோன்கள்: உளவு பார்க்கப்பட்ட...
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.