சினிமாக்காரர்கள் பேச்சு, சித்த நாழியில் போச்சு என்றுதான் கூற வேண்டும் இந்த கொடூரத்தை கேட்டால். கந்தசாமி படத் துவக்கவிழாவிலும், அப்படம் வெளியான நேரத்திலும் ஒரு விஷயத்தை பிரமாண்டமாக பேச வைத்தார்கள். சுமார் முப்பது கிராமங்களை தத்தெடுத்துக் கொள்வது. ஒவ்வொரு கிராமத்திற்கும் மூன்று லட்சம் வீதம் ஒதுக்கி இந்த கிராமங்களின் அடிப்படை வசதிகளை செய்து தருவது. இதுதான் திட்டம். இந்த வேலையை கந்தசாமி அறக்கட்டளையே கவனிக்கும் என்றார்கள்.
தமிழகம் முழுவதுமிருந்து வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து சுமார் முப்பது கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டன. அத்தனை பேரையும் சென்னைக்கு வரவழைத்த படக்குழு, மேடையில் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் கையில் மூன்று லட்சத்திற்கான டம்மி செக்கை நீட்டினார்கள். (கட்-அவுட் போலவே இருக்குமே, அதேதான்) போட்டோவுக்கு போஸ் கொடுத்ததோடு சரி. அந்த செக்கின் பலனை எந்த கிராமமும் அனுபவிக்கவில்லையாம் இன்னும்.
நல்லவேளையாக ஊரிலிருந்து திரண்டு வந்த மக்களின் போக்குவரத்தை செலவையாவது கொடுத்தார்கள். இல்லையென்றால் அதற்கும் சேர்த்து சாபம் கொடுத்திருப்பார்கள் அவர்கள். ஏனிந்த தாமதம்? படத்தின் இயக்குனர் சுசிகணேசனை கேட்டால் இதற்கெல்லாம் அரசாங்கத்திடம் அனுமதி வாங்கணும். அதில் நீடிக்கிறது சிக்கல் என்கிறார். தயாரிப்பாளர் தாணுவோ இன்னும் அந்த திட்டம் கைவிடப்படவில்லை என்கிறார்.
பாயாசத்துக்கு ஆசைப்பட்டு பல்செட்டை முழுங்குன மாதிரி திகைச்சு போயிருக்காங்க முப்பது கிராமத்து மக்களும்!

No comments:
Post a Comment