ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது.
பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ்,
இலங்கையில் ஈழத் தமிழர்களின் நலனை காக்கும் வகையில் தமிழக சட்ட மன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கவும் ஜெயலலிதா தொடர்ந்து குரல் கொடுப்பார். யாருக்கும் அவர் பயப்படமாட்டார். அவரது துணிச்சல் பாராட்டுக்குறியது.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீராங்கனை வேலு நாச்சியார் போன்று வீரம் மிக்கவர் ஜெயலலிதா தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சீமானும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், சீமானும் இரட்டை குழல் துப்பாக்கிகள்.
மகாதேவி படத்தில் எம்.ஜி.ஆர். புலிக்கொடி ஏந்தி வருவார். இங்கும் புலிக் கொடி பட்டுடொளி வீசி வருகிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கப்பலில் சென்று
கொண்டிருப்பார்கள். அப்போது ஆள் உயர அலை எழும்பி வரும். அலையால் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் மீது போய் விழுவார். அப்போது அவர் பொல்லாத அலை இது என்பார். ஆனால் எம்.ஜி.ஆரோ, நம்மை புரிந்து கொண்ட அலை என்று கூறுவார்.
இங்கு அலையென திரண்டு வந்திருக்கும் நீங்கள் எல்லாம் சீமானை புரிந்து கொண்டு இங்கு வந்திருக்கிறீர்கள். தமிழ் ஈழம் மலர முதல் அமைச்சர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

No comments:
Post a Comment