விஷாலுக்கு மாறு கண் வரவழைத்தது, ஆர்யாவின் தலைக்கு அப்பள சட்டி 'கட்டிங்' போட்டது, அல்டிமேட் பணக்காரர் ஆர்.கேவை சாணியில் போட்டு புரட்டியது, டைரக்டர் ஜிஎம்.குமாரை அம்மணமாக்கி அழ வைத்தது என்று பாலாவின் பிடிக்குள் சிக்கி பொடிப்பொடியாகவே விரும்புகிறார்கள் அத்தனை கலைஞர்களும். அவர் சொன்னால் மறு பேச்சே கிடையாது. என்ன சொன்னாலும் செய்வோம், எப்படி சொன்னாலும் நடிப்போம் என்கிற அளவுக்கு பாலா பைத்தியம் பிடித்தாட்டுகிறது கோடம்பாக்கத்தை.
நேற்று வெளியாகியுள்ள அவன் இவன் நிலைமை என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ள திங்கட் கிழமை வரை பொறுத்திருக்க வேண்டும். (இந்த படத்திற்கு 5 கோடி சம்பளம் வாங்கியிருக்காராம் பாலா) ஆனால் அதற்குள் அவரது அடுத்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார்கள் என்ற புதிய கேள்வியை எழுப்பி குளிர்காய ஆரம்பித்திருக்கிறது மீடியா.
தென்மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனை இப்போதே கண்டுபிடித்து வைத்திருக்கிறாராம் பாலா. அவனைதான் ஹீரோவாக்கப் போகிறாராம் அடுத்த படத்தில். இதற்கிடையில் விக்ரமையும் வரச்சொல்லி ஒரு லைன் சொல்லியிருக்கிறாராம். (அதற்கு மேலா சொல்லப் போகிறார்?) அவரும் எப்ப கூப்பிட்டாலும் வர்றதுக்கு ரெடி என்று கூறிவிட்டாராம்.
யாருப்பா அங்க? அந்த அழுக்கு லுங்கிய ரெடி பண்ணுங்க!

No comments:
Post a Comment