பல ஆண்டுகாலம் பேசப்பட்ட கருப்பு பண விவகாரத்தில்
முதல் முறையாக மூன்று தொழிலதிபர்களின்
பெயர்கள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல்
செய்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. டாபர் குரூப்பின் பிரதீப்
பர்மன், கோவா சுரங்க தொழிலதிபர்
ராதா எஸ். திம்ப்லோ, தங்கம்,
வெள்ளி வர்த்தகர் பங்கஜ் சிமன்லால் லோத்யா
ஆகியோரது பெயர்தான் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டாபர் குரூப்பின் பிரதீப் பர்மன், கோவா
சுரங்க தொழிலதிபர் ராதா எஸ். திம்ப்லோ,
தங்கம், வெள்ளி வர்த்தகர் பங்கஜ்
சிமன்லால் பற்றிய குறிப்புகள்...
முதலில்
சிக்கிய மூன்று முதலைகள் இவர்கள்தான்..
பிரதீப்
பர்மன்
டாபர் குரூப் நிறுவனமானது உடல்நலன்
சார்ந்த ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குநராக இருப்பவர் பிரதீப் பர்மன்.
2012ஆம்
ஆண்டு ஆம் டெல்லி முன்னாள்
முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதீப் பர்மன் வெளிநாட்டில்
கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும்
பிரதீப் பர்மன் குடும்பத்தைச் சேர்ந்த
ஆனந்த் சந்த், பிரதீப் சந்த்,
ரத்தன் சந்த் ஆகியோர் சுமார்
ரூ25 கோடி அளவு வெளிநாட்டில்
கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளதாகவும்
கேஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் டாபர் குரூப்போம், பர்மன்
என்.ஆர்.ஐ.யாக
இருந்த போது சட்டப்பூர்வமாக தொடங்கப்பட்ட
வங்கிக் கணக்கைத்தான் கருப்பு பணமாக மத்திய
அரசு தெரிவித்துள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.
மத்திய
அரசின் இந்த நடவடிக்கை மூலம்
வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரை கருப்புப்
பணம் வைத்திருப்பவராக குற்றம்சாட்ட முயற்சிக்கிறது என்கிறது டாபர் குரூப்.
பங்கஜ்
சிமன்லால் லோதியா
பிரதமர்
மோடியின் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச்
சேர்ந்தவர் பங்கஜ் சிமன்லால். அடிப்படையில்
தங்க வர்த்தகர். இவரது வணிக குழுமத்தின்
பெயர் ஸ்ரீஜி.
ஸ்ரீஜி
குழுமம் மூன்று தொழில் நிறுவனங்களைக்
கொண்டது. ஸ்ரீஜி டிரேடிங் கம்பெனி,
ஸ்ரீஜி ஆபரணங்கள் வர்த்தகம், ஸ்ரீரியல் எஸ்டே.
ராதா எஸ். திம்ப்லோ,
கோவாவைச்
சேர்ந்த சுரங்க அதிபர் திம்ப்லோ.
சட்டவிரோத
சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாக திம்ப்லோ நிறுவனம் மீது குற்றச்சாட்டு உள்ளது.
பாகிஸ்தானைச்
சேர்ந்த ஒருவரின் பெயரால் உரிமம் பெற்று
சட்டவிரோத மாக சுரங்கத் தொழிலில்
திம்ப்லோ ஈடுபட்டதாக 2012ஆம் ஆண்டு மத்திய
அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
No comments:
Post a Comment