பாஸ்டன்
பல்கலைக்கழக இசை கல்லூரியில் சேர்ந்து
படிப்பேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இசை அமைப்பாளர்
ஏ.ஆர்.ரகுமானுக்கு
உலகப் புகழ்பெற்ற பாஸ்டன் பல்கலைகழகம் சமீபத்தில்
டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
இதற்கான
விழா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பெர்க்லீ இசை
கல்லூரியில் நடந்தது. இதில் கலந்துகொண்டு கவுரவ
டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டார் ரகுமான்.
பிறகு அவர் பேசியதாவது:என்னுடைய
இசை குடும்பத்தினரை இங்கு பார்க்கும்போது மகிழ்ச்சி
அடைகிறேன். இங்கு எனது குடும்பத்தினர்
யாரும் இல்லை என்றாலும் எனது
சிறிய ஆசையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
1989ல் எல்.சங்கர் இசை அமைப்பாளரிடம் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது பெர்க்லீ கல்லூரி பற்றி அறிந்தேன்.
அதில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டேன். அந்த
நேரத்தில்தான் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா படத்தில் இசை
அமைக்க வாய்ப்பு வந்தது. பெர்க்லீயா? ரோஜா
படமா? என்று எண்ணியபோது கல்லூரி
வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். தற்போது இங்கு இருப்பது
சந்தோஷமாக இருக்கிறது. எனக்காக இன்றைக்கும் இங்கு
வகுப்புகள் திறந்தே இருக்கின்றன. என்றாவது
ஒருநாள் பெர்க்லீ கல்லூரியில் சேர்வேன்.இவ்வாறு ரகுமான் பேசினார்
No comments:
Post a Comment