இந்த நிலையில் ரஜினியை பாஜகவில் சேருமாறு
யாரும் கட்டாயப்படுத்தவில்லையே என்று மத்திய அமைச்சர்
பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக
அவர் கன்னி்யாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
யார் வேண்டுமானாலும் வரலாம்
பா.ஜ.க.வுக்கு
யார் வந்தாலும் அவர்களை வரவேற்போம். ரஜினியை
பா.ஜ.க.வில்
சேருமாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
அவர் விவரம் தெரிந்தவர். ஆன்மீகமும்,
தேச பக்தியும் கொண்டவர்.
முடிவெடுக்க
அவருக்குத் தெரியும்
எந்த நேரத்தில் எந்த முடிவு எடுக்க
வேண்டும் என்று அவருக்கு தெரியும்.
அவர் நல்ல முடிவு எடுப்பார்.
வளர்ச்சி
அடைந்த நாடாக மாறுகிறது இந்தியா
பிரதமர்
மோடி தலைமையிலான அரசு நாட்டுக்கு தேவையான
நல்ல திட்டங்களை செய்து வருகிறது. ஏழைகளுக்கு
வங்கி கணக்கு திட்டம், தூய்மை
திட்டம் போன்ற திட்டங்களால் இந்தியா
வளர்ச்சியடைந்த நாடாக மாறி வருகிறது.
No comments:
Post a Comment