சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.
சிதம்பரத்தின் மகன் கார்த்தி சந்தித்து
பேசியது பாஜகவினரை கோபம் அடைய வைத்துள்ளதாம்.
ரஜினிகாந்த்
அரசியலுக்கு வர மாட்டேன் என்று
உள்ளார். இந்நிலையில் லோக்சபா தேர்தலின்போது அவரை
பாஜகவில் சேர்க்க நினைத்த பிரதமர்
மோடி சென்னை வந்தபோது ரஜினியை
சந்தித்து பேசினார். ஆனால் ரஜினி அரசியலுக்கு
வர விரும்பாததை தெரிந்து கொண்ட மோடி கட்டாயப்படுத்தாமல்
சென்றுவிட்டார்.
இந்நிலையில்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
சிறையில் அடைக்கப்பட்டபோது ரஜினியை எப்படியாவது தங்கள்
கட்சியில் சேர்க்க வேண்டும் என்று
பாஜக தமிழக தலைவர் தமிழிசை
சவுந்திரராஜன் பெருமுயற்சி செய்தார்.
ரஜினி
தமிழிசை
சவுந்திரராஜன் ரஜினியை பாஜகவில் சேர
தொடர்ந்து அழைப்பு விடுத்தது, அவரின்
மனைவி லதாவை சந்தித்து பேசியது
என எதுவுமே பலனிக்கவில்லை.
கடிதம்
பாஜக இப்படி முயற்சி செய்து
வரும் வேளையில் ரஜினியோ ஜெயலலிதா சிறையில்
இருந்து வந்ததும் அவரை வரவேற்று கடிதம்
எழுதினார். இது பாஜகவினரை அதிருப்தியடைய
வைத்தது.
காங்கிரஸ்
முன்னாள்
மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன்
கார்த்தி போயஸ் கார்டன் சென்று
ரஜினியை சந்தித்து பேசியுள்ளார்.
அரசியல்
ப. சிதம்பரம் துவங்கியிருக்கும் எழுத்து அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு
அழைக்க வந்திருக்கிறார் கார்த்தி. அப்போது கார்த்தியும், ரஜினியும்
வெகுநேரம் அரசியல் பற்றி பேசியுள்ளனர்
என்று கூறப்படுகிறது.
பாஜக
கார்த்தி
ரஜினியை சந்தித்து பேசியது பற்றி அறிந்த
பாஜகவினர் கோபம் அடைந்துள்ளார்களாம். இனியும்
ரஜினியை புகழ்ந்து பேசி அவரை கட்சிக்கு
அழைக்கக் கூடாது என்ற முடிவுக்கு
வந்துள்ளார்களாம் பாஜகவினர்.
No comments:
Post a Comment