Thursday, October 30, 2014

சோனியாவின் மூன்றாவது படம் - விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்

இனிது இனிது படத்தில் சீனியர் மாணவியாக சுருள் முடியுடன் நடித்த சோனியாவை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள். பையா படத்தில் கார்த்தியின் தோழியாக வருகிறவர்.

தெலுங்கு நடிகையான சோனியா தமிழில் இனிது இனிது, பையா படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மூன்றாவதாக விரைவில் ஒரு படத்தில் நடிக்கயிருப்பதாக தெரிவித்தார்.

சோனியாவுடன் நடிக்கயிருப்பவர் விஜய் சேதுபதி. ஆனால் சோனியாவுக்கு ஹீரோயின் வேடம் கிடையாது. சின்ன வேடம்தான், ஆனால் முக்கியமானது.


மலையாள படவுலகிலிருந்து சோனியாவுக்கு அழைப்புகள் வருகின்றன. விரைவில் அவரது மலையாளப்பட பிரவேசம் இருக்கலாம்.


No comments:

Post a Comment