திருட்டு
விசிடியை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கும் சினிமாக்காரர்களில் இயக்குனரும் நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு முக்கிய இடம் உண்டு.
மற்றவர்களையும் அதற்கான முயற்சிகளில் முடுக்கிவிடும்
வேலையிலும் ஈடுபட்டு வருகிறார். கே.கே.நகர்
காமராஜர் சாலையில் இருக்கிறது கவிஞர் கிச்சன். பார்த்திபன் விரும்பிச் சாப்பிடும் உணவகங்களில் இதுவும் ஒன்று. உணவகம்
நடத்தும் கவிஞர் ஜெயம்கொண்டான் சினிமாவில்
பாடல்களும் எழுதிவருகிறார்.
‘சோக்கு
சுந்தரம்’ படத்தில் சமீபத்தில் இவர் எழுதிய ‘போகாத
கோயிலில்ல, வேண்டாத தெய்வமில்ல..’ என்கிற
தாயின் பெருமைபேசும் பாடல் படக்குழுவால் பெரிதும்
பாராட்டுப்பெற்றுள்ளது. இவர், பார்த்திபனின் ஆலோசனைப்படி
தனது உணவகத்தில் ஒரு அறிவிப்பு வைத்திருக்கிறார்.
தியேட்டரில் படம் பார்த்த டிக்கெட்டை
எடுத்து வந்து, சாப்பிடுபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி
என்பதே அது. நிறையபேர் வந்து
சாப்பிட்டுப் போகிறார்களாம்.
No comments:
Post a Comment