Thursday, October 30, 2014

கத்தி, பூஜை வெளிநாட்டு வசூல் நிலவரம்

கத்தி, பூஜை திரைப்படங்கள் தமிழகத்தில் வெளியான அதேநாள் யுஎஸ், யுகே உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியானது.
யுஎஸ்ஸில் கத்தி முதல் வார இறுதியில் 86 திரையிடல்களில் 288,000 யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை அதன் வசூல் 559,579 யுஎஸ் டாலர்கள். நமது ரூபாய் மதிப்பில் 3.42 கோடிகள்.

பூஜை யுஎஸ்ஸில் முதல் வார இறுதியில் 15 திரையிடல்களில் 6,125 யுஎஸ் டாலர்களை தனதாக்கியுள்ளது. ரூபாயில் 3.75 லட்சங்கள்.

கனடாவில் கத்தி வார இறுதியில் 3.55 லட்சங்களை வசூலித்துள்ளது.


ஆஸ்திரேலியாவில் கத்தி வார இறுதியில் பத்து திரையிடல்களில் 16,0979 ஆஸ்திரேலிய டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாயில் 86.81 லட்சங்கள். பூஜை எட்டு திரையிடல்களில் 16,968 ஆஸ்திரேலிய டாலர்களை தனதாக்கியுள்ளது. ரூபாயில் 9.15 லட்சங்கள்.


மலேசியாவில் கத்தி வார இறுதிவரை 3.30 கோடிகளையும், பூஜை 1.06 கோடியும் வசூலித்துள்ளது.


No comments:

Post a Comment