தமிழகத்தில்
கிட்டத்தட்ட 6152 அரசு பள்ளிகளில் கழிப்பறைகளே
இல்லை என்று மத்திய மனித
வள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
இதனால்
சுதாரித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை
அவசரம் அவசரமாக கழிப்பறை தொடர்பான
நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாம்.
மத்திய
மனித வள மேம்பாட்டுத் துறை
அமைச்சகத்தின் கீழ் அனைத்து கல்வி
வாரியங்களும் வருகின்றன.
தமிழகத்தில்
6152 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடையாது...!
கழிப்பறைகள்
பற்றிய ஆய்வு:
அதில் பள்ளிக் கல்வியும் வருவதால்
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்
செயல்படும் பள்ளிகளில் முழுமையாக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதா என்று கடந்த மாதம்
ஆய்வு நடத்தியது.
மனிதவள
மேம்பாட்டு அமைச்சகம்:
அனைவருக்கும்
கல்வி இயக்கம் மூலம் நாடு
முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கிடைத்த
புள்ளிவிவரங்களை பெற்று மத்திய மனித
வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தனது
இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
பள்ளிகளின்
விவரங்கள்:
மாநிலம்
வாரியாக வெளியிடப்பட்டுள்ள அந்த பட்டியலில், ஒவ்வொரு
மாநிலத்திலும் எத்தனை பள்ளிகள் கழிப்பறை
இல்லாமல் இயங்கி வருகின்றன என்ற
விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
20 ஆயிரம்
பள்ளிகள்:
அதில் குறிப்பிட்டுள்ளபடி மேற்கு வங்கம், பீகார்,
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் தலா
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிப்பறை தேவை உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்
அதிகம்:
கர்நாடக
மாநிலத்தில் 49 பள்ளிகளிலும், கேரளாவில் 212 பள்ளிகளிலும், குஜராத்தில் 940 பள்ளிகளிலும் கழிப்பறைகள் இல்லை என்று தெரிவித்துள்ளதுடன்,
தமிழகத்தில் 6152 பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கு
கேட்கும் அமைச்சகம்:
மாநில அரசுகள், கழிப்பறை கட்டாமல் விட்டது தொடர்பாகவும் மத்திய
மனித வள மேம்பாட்டுத் துறை
அமைச்சகம் சுட்டிக் காட்டியதுடன், மத்திய அரசின் மூலம்
பெறுகின்ற நிதியை எதற்காக செலவிட்டுள்ளார்கள்,
என்ற கணக்கையும் கேட்டுள்ளது.
2057 பள்ளிகள்:
இந்த பட்டியல் வெளியானதை அடுத்து தமிழகத்தில் பள்ளிக்
கல்வித்துறை அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட
அறிவிப்புகளின் படி தமிழகத்தில் 2057 பள்ளிகளில்
தான் கழிப்பறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சி
தரும் அறிவிப்பு:
அதற்காக
ரூபாய் 160 கோடியே 77 லட்சம் நிதியும் ஒதுக்குவதாக
அறிவித்தனர். இந்நிலையில், மத்திய மனித வள
மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தமிழகத்தில் 6152 பள்ளிகளில் கழிப்பறை இல்லை என்று அறிவித்துள்ளது
அதிர்ச்சியாக உள்ளது.
கழிப்பறைகள்
கட்ட ஏற்பாடு:
இதனையடுத்து
தமிழகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம்
தகவல்கள் பெறப்பட்ட பிறகு பள்ளிகளில் கழிப்பறைகள்
ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். இதையடுத்து,
வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கழிப்பறைகள்
கட்டி முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment