இலங்கை
பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர விரும்பினால்
தேர்வாளர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்ற
குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
இலங்கை
பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர விரும்புவோர்
தேர்வாளர்கள், அணி நிர்வாகிகளுடன் படுக்கையை
பகிர வேண்டும் என்று உள்நாட்டு ஊடகம்
செய்தி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அணியில் சேர்க்கப்பட்ட பிறகும் அவர்கள் தங்கள்
இடத்தை தக்க வைத்துக்கொள்ளவும் படுக்கையை
பகிர வேண்டுமாம்.
இந்நிலையில்
இந்த குற்றச்சாட்டு குறித்து உடனே விசாரணை நடத்த
இலங்கை கிரிக்கெட் எக்சிகியூட்டிவ் குழுவின் அவசர கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை
நடத்த இலங்கை கிரிக்கெட் வாரிய
துணை தலைவர் மோகன் டி
சில்வா, செயலாளர் நிஷந்தா ரணதுங்கா, துணை
செயலாளர் ஹிரந்தா பெரேரா, ஆண்கள்
பிரிவின் தேசிய தேர்வாளர் சனத்
ஜெயசூர்யா ஆகியோர் கொண்ட நால்வர்
குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு விசாரணை நடத்தி
அறிக்கை சமர்பிக்க உள்ளது. இந்த குழுவினர்
தேசிய அளவில் பெண் வீரர்களை
தேர்வு செய்பவர்கள், அணி மேனேஜர், பயிற்சியாளர்,
தேசிய அணி உறுப்பினர்களை அழைத்து
விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment