Friday, October 31, 2014

சிறந்த வீரர் விருது மெஸ்ஸியை முந்தினார் ரொனால்டோ கருத்துகள்

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் பிரபல கால்பந்து போட்டித் தொடரானலா லிகாசாம்பியன்ஷிப்பின் சிறந்த வீரராக ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2008-09ல் இந்த விருது முதல் முறையாக அறிமுகமானதில் இருந்து தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்த பார்சிலோனா அணி வீரர் லயனல் மெஸ்ஸியை (அர்ஜென்டினா) இந்த ஆண்டு முதல் முறையாக ரொனால்டோ முந்தியுள்ளார்.


லா லிகா தொடரின் சிறந்த தாக்குதல் வீரர் (ஸ்டிரைக்கர்) மற்றும் சிறந்த கோல் அடித்த வீரர் என மேலும் 2 விருதுகளை பெற்ற ரொனால்டோ ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளதுடன், உலகின் தலை சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுக்கும் மெஸ்ஸி - ரொனால்டோ இடையே கடும் போட்டி நிலவுகிறது.


No comments:

Post a Comment