முட்டாள்களுடன்
பணியாற்றிய நாட்கள் வாழ்வில் சவாலாக
இருந்தது என்றார் இசை அமைப்பாளர்
கீரவாணி. அவரது பேச்சுக்கு கடும்
எதிர்ப்பு கிளம்பி உள்ளது.அழகன்,
நீபாதி நான் பாதி, பாசவலை.
நான் ஈ உள்ளிட்ட தமிழ்
மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களுக்கு
இசை அமைப்பாளராக பணியாற்றியவர் கீரவாணி. வரும் 2016ம் ஆண்டில் திரைப்பட
இசை அமைப்பாளர் பொறுப்புக்கு முழுக்குபோட முடிவு செய்திருக்கிறார். இதை
சமீபத்தில் அறிவித்தார். தற்போது குறைந்த அளவிலான
படங்களையே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சமீபத்தில்
அவர் அளித்த பேட்டியின்போது,‘இசை
என்னுடைய வாழ்வின் ஒரு அங்கம். வருங்காலத்தில்
வேறு சில பணிகளுக்கான திட்டம்
வகுத்திருக்கிறேன். சில நேரம் நாம்
திட்டமிட்டபடி வாழ்க்கை செல்வதில்லை. என் வாழ்வில் கடுமையான
சவால்களை நான் சந்தித்தது சில
முட்டாள்தனமானவர்களுடன் பணியாற்றிய நேரத்தில்தான் என்றார். இவரது இந்த பேச்சு
சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. இதனால் கடும் எதிர்ப்பும்
கிளம்பி உள்ளது. முட்டாள்கள் என்று
யாரை அவர் குறிப்பிடுகிறார் என்பதை
தெரிவிக்க வேண்டும் என திரையுலகை சேர்ந்த
சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஆனால் பதில் எதுவும் சொல்லாமல்
கீரவாணி மவுனம் காத்து வருகிறார்.
No comments:
Post a Comment