Thursday, October 30, 2014

திடீர் திருப்பம் - அஜீத் ஜோடி ஹன்சிகா கிடையாது

கௌதம் இயக்கத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார். ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகிறது. அது முடிந்ததும் நடிகர்கள் தேர்வு இருக்கும் என்று சிவா கூறியிருந்தார்.

இந்தப் படத்தில் எப்படியும் அஜீத்துடன் ஜோடி சேர்வது என்று ஹன்சிகா முயற்சி செய்ததாகவும், அஜீத்துடனும், சிவாவுடனும் போனில் பேசி நாயகி வேடத்தை வாங்கிவிட்டதாகவும் வதந்திகள் கிளம்பின. அவை வெறும் வதந்திதான், கண்டிப்பாக ஹன்சிகா படத்தில் நடிக்கப் போறதில்லை என சிவா கூறியுள்ளார்.

அப்படியானால் யார் ஹீரோயின்?


அது இன்னும் முடிவாகவில்லையாம். ஆனால் ஹன்சிகா கிடையாது என்று உறுதிபட தெரிவித்துள்ளார் சிவா.


No comments:

Post a Comment