மதுபானங்களின்
விலையை உயர்த்த தமிழக அரசு
முடிவு செய்துள்ளதாம்.
பால் விலையை லிட்டருக்கு ரூ.10
உயர்த்தி முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்
உத்தரவிட்டார். பால் விலை உயர்வுக்கு
திமுக, தேமுதிக உள்ளிட்ட பல
கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திமுகவும், தேமுதிகவும் பால் விலை உயர்வை
கண்டித்து போராட்டம் நடத்த உள்ளன.
நவம்பர்
முதல் வாரத்தில் மதுபான விலையை உயர்த்தும்
அரசு
இந்நிலையில்
டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக
அரசு முடிவு செய்துள்ளது. நவம்பர்
மாதம் முதல் வாரத்தில் மதுபானங்களின்
விலை உயர்த்தப்படுகிறதாம்.
தீபாவளி
அன்று மட்டும் தமிழகத்தில் டாஸ்மாக்
கடைகளில் ரூ.138 கோடிக்கு விற்பனை
நடைபெற்றது. இந்த விற்பனை அளவு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment