Wednesday, October 29, 2014

மோனிகா கடைசி படம்

மோனிகா கடைசியாக நடித்த படத்தில் மழை காட்சி படமாக்கப்பட்டது.‘அழகி, ‘சிலந்தி போன்ற படங்களில் நடித்தவர் மோனிகா. சமீபத்தில் இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை ரஹீமா என மாற்றி கொண்டார். கடைசியாகநதிகள் நனைவதில்லை படத்தில் நடித்தார். இப்படம் பற்றி தயாரிப்பாளர்-இயக்குனர் பி.சி.அன்பழகன் கூறியது: காமராசு, அய்யா வழி ஆகிய படங்களை இயக்கி இருக்கிறேன். ‘நதிகள் நனைவதில்லை படத்தில் வித்தியாசமான காதலை சொல்ல முயன்றிருக்கிறேன். காதல் என்ற வலையில் இளைஞர்கள் சிக்கி நிலைதடுமாறுகின்றனர்

இப்படத்தில் காதல் வலையில் சிக்கும் இளைஞன் காதலியிடம் அடிமை சாசனம் எழுதி கொடுக்காமல் சுயமரியாதையோடு எப்படி இயக்குகிறான் என்பதை காமெடி கலந்து சொல்லப்படுகிறது.

பிரணவ் ஹீரோ. மோனிகா, நிசா, ஹீரோயின். காயத்ரி, கல்யாணி, சரிதா, செந்தில், பாலாசிங், மதுரை முத்து, சிங்கமுத்து, குண்டுகல்யாணம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு. சவுந்தர்யன் இசை. இவ்வாறு இயக்குனர் பி.சி.அன்பழகன் கூறினார்.


No comments:

Post a Comment