'
அனைத்து கலெக்டர்களையும்
அழைத்துப் பேசி, வெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; இந்த நடவடிக்கைகளை மக்கள்
முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தலின்படி செய்வதாக பயப்படாமல், பன்னீர்செல்வம் அறிவித்
தால், முதல்வர் பதவி நிலைக்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பான,
அவரது அறிக்கை:தமிழகத்தில், ஆட்சி என, ஒன்று இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்காகவாவது,
ஆட்சியினர் பயத்திலிருந்து விடுபட்டு உடனடியாக, கலெக்டர்களை அழைத்து பேசி, தேவையான
வெள்ளநிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல்,
மாநில அரசின் சார்பில், இதற்காக தனியாக சிறப்பு நிதி இருக்கிறது. நிதித் துறை செயலரை
அழைத்துப் பேசினால், அந்த சிறப்பு நிதி பற்றி கூறுவார். அதிலிருந்து நிதியை எடுத்து,
அதை நிவாரண நிதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒன்றிரண்டு நாட்களில், அந்த நிதியை
ஒதுக்கிட, ஆவன செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட
விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு நிவாரணமாக, எத்தனை ஆயிரம் ரூபாய் தரப்படும் என்பதையும்
அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு அமைச்சரையும், ஒவ்வொரு மாவட்டத்திற்கு உடனே அனுப்பி, பாதிக்கப்பட்ட
மக்களை சென்று பார்த்து, ஆறுதல் கூற வேண்டும். அவர்களை காப்பாற்றுவதற்கான, நடவடிக்கையை
முடுக்கி விட வேண்டும்.இந்த நடவடிக்கைகளை, ஜெயலலிதா வலியுறுத்தல்படி செய்வதாகவே, பன்னீர்செல்வம்
பயப்படாமல் அறிவித்துக் கொள்ளலாம். அப்போது தான் இருக்கும் பதவி நிலைத்திடக்கூடும்.இவ்வாறு,
கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment