காவியத்தலைவன்
படம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு நடிப்புப் போட்டி நடத்த உள்ளதாக இயக்குனர் வசந்தபாலன்
கூறினார்.
இதுபற்றி நிருபர்களிடம்
அவர் மேலும் கூறியதாவது:‘சங்கமம்’ படத்துக்குப் பிறகு முழுநீள இசை பற்றிய
படம் இது. ‘சங்கராபரணம்’, ‘சிப்பிக்குள் முத்து’, ‘சலங்கை ஒலி’, ‘சிந்து பைரவி’ ஆகிய படங்களின் வரிசையில்
இதுவும் இருக்கும்.
சித்தார்த், பிருத்விராஜ்,
வேதிகா, அனைகா நடிப்பு பேசப்படும். சங்கரதாஸ் சுவாமிகள், கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள்
ஆகியோருக்கு மரியாதை செய்யும் படமாகவும் இருக்கும். நாடகக்கலை குறித்து இன்றைய தலைமுறையினர்
புரிந்துகொள்ளும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கிட்டப்பாவுக்கு
கே.பி.சுந்தராம்பாள் எழுதிய காதல் கடிதங்கள், உண்மையிலேயே ருசிகரமானது, போற்றத்தக்கது.
அவற்றை மையப்படுத்தி ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.
இது குறிப்பிட்ட
யாரையும் சார்ந்து உருவாக்கப்பட்ட படமல்ல. சில உண்மைச் சம்பவங்களையும், கற்பனையும்
சேர்த்து அற்புதமான காதல் கதையை சொல்லியிருக்கிறேன். நவம்பர் 14ம் தேதி ரிலீசாகிறது.
13-ம் தேதி துபாயில்
பிரீமியர் ஷோ. தமிழகம் முழுவதும், வேன் மூலம் சித்தார்த், வேதிகா மற்றும் எங்கள் குழுவினர்
சென்று ‘ரோட் ஷோ’
நடத்த திட்டமிட்டுள்ளோம். கல்லூரி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு
நடிப்புப் போட்டி நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். சித்தார்த், சசிகாந்த் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment