ஜப்பானைச்
சேர்ந்த பிரபல எலக்ட்ரானிஸ் நிறுவனமான
சோனி தனது புதிய எக்ஸ்பீரியா
ஆகுவாடெக் ஷோரூமை துபாயில் கடலுக்கடியில்
அமைக்கும் புதிய வணிக முயற்சியில்
இறங்கியுள்ளது. இந்த ஷோரூமில் வரும்
டிசம்பர் மாதம் 3ம் தேதி
முதல் சோனி நிறுவனம் தனது
புது அறிமுகமான தண்ணீரால் பாதிப்பு ஏற்பட்டாத வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்மார்ட்
போன், டேப்லட் உள்ளிட்டவற்றை விற்பனை
செய்ய இருக்கிறது. கடலுக்கு அடியே அமைய உள்ள
உலகின் முதல் எக்ஸ்பீரியா ஆகுவாடெக்
ஷோரூம் நிச்சயமாக வாடிக்கையாளருக்கு ஒரு புது அனுபவத்தை
தரும் எனவும் இது அவர்களது
வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு
தருணமாக அமையும் எனவும் சோனி
நிறுவனத்தின் பிராந்திய துணைத்தலைவர் ருயிடீகெர் ஓடென்பேச் தெரிவித்தார்.
நீச்சல்
மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் திறம்பட பயிற்சி பெற்ற
வல்லுநர்களால் வாடிக்கையாளர்கள் கடலுக்கு அடியில் உள்ள ஷோரூமிற்கு
பொருட்களை வாங்குவதற்கு அழைத்துவரப்படுவார்கள், இயல்பாக மூச்சுவிட முயும்,
தரையில் எளிதாக நிற்க முடியும்
எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு வசதி, சிறப்பு ஏற்பாடுகள்
செய்து வருவதாக சோனி நிறுவனம்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment