போதைப்
பொருள் கடத்தியதாக பொய் வழக்கு தொடர்ந்து
5 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இன்று தூக்கு தண்டனை
விதித்துள்ளது கொழும்பு உயர்நீதிமன்றம்.
ராமேஸ்வரத்தில்
இருந்து 2011ஆம் ஆண்டு டிசம்பர்
28ந் தேதி காலை 712 விசைப்படகுகளில்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு
சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே
மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து
வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை
சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள்
எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்து
சென்றனர்.
அவர்களின்
படைகையும் பறிமுதல் செய்தனர். சிறை பிடித்துச் செல்லப்பட்ட
மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை
முகாமில் தங்க வைக்க்கப்பட்டு பின்னர்
அவர்கள் மீது போதைப் பொருள்
கடத்தி வந்ததாக ஊர்காவல்துறை போலீசார்
வழக்குப் பதிவு செய்தனர். இது
தமிழகத்தில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் மேலும் 3 இலங்கையர்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 8 பேர் மீது வழக்கு
விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில்
இன்று இந்த வழக்கை விசாரித்து
தீர்ப்பளித்த கொழும்பு உயர்நீதிமன்றம் 5 ராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட 8 பேருக்கும் தூக்கு
தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment