Friday, October 31, 2014

கதை எழுத சொல்லும் கத சொல்லப் போறோம் டீம்

5 என்டர்டெயின்மென்ட்ஸ் இந்தியா வழங்க, ரிலாக்ஸ் ஆட்ஸ் தயாரிக்கும் படம், ‘கத சொல்லப் போறோம்’. எஸ்.கல்யாண், ஜே.ஜெயகிருஷ்ணன் தயாரிக்கிறார்கள்.

 ‘ஆடுகளம்நரேன், விஜயலட்சுமி, காளி, பசங்க சிவகுமார், குழந்தை நட்சத்திரங்களான ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த், அரவிந்த், ராகுல் உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு, ஜெபின். இசை, பவன். எஸ்.கல்யாண் இயக்குகிறார்.

இந்தப் படத்துக்காக, பள்ளி மாணவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டது. இதுபற்றி தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன், கல்யாண் கூறும்போது, ‘சிறுவர், சிறுமியர்களுக்கு கதை எழுதும் ஆர்வம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள கதைப் போட்டி நடத்தப்பட்டது.


தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் மொத்தம் 5 லட்சம் விண்ணப்பங்கள் கொடுத்து கதை எழுதச் சொன்னோம். 20 நாட்களுக்குள் சுமார் ஐம்பதாயிரம் கதைகள் வந்துள்ளன. இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கை உயரும். அதில் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து பரிசு வழங்க உள்ளோம்என்றனர்.


No comments:

Post a Comment