‘ஆரோகணம்’ என்கிற முதல் படத்திலேயே
ரசிகர்களை நெருங்கியவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். நடிகை, இயக்குனர் என்று பன்முகம் கொண்ட
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் இரண்டாவது படம் ‘நெருங்கிவா முத்தமிடாதே’.
ஏ.வீ.ஏ. நிறுவனம் சார்பில் ஏ.வீ.அனுப் தயாரிக்கிறார்.
புதுமுகம் ஷபீர் இதன் நாயகன். பியா நாயகி. தம்பி ராமையா, அம்பிகா, தலைவாசல் விஜய்,
ஒய்.ஜி.மகேந் திரன் ஆகியோரும் இருக்கிறார்கள். ஒளிப்பதிவு வினோத்பாரதி. எடிட்டிங் தேசிய
விருது பெற்ற சாபு ஜோசப். மேட்லீ புளூஸ் இசையில்
அனைத்துப் பாடல்களையும் தேசிய விருது பெற்ற
நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார்.
“தலைப்பைப்
பார்த்துவிட்டு இது தப்பான படமாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது நூறு சதவீதம்
சைவப் படம். பெட்ரோல் தட்டுப்பாடுதான் படத்தோட மையக்கரு. ஆனால் இது முழுக்க முழுக்க
ஜனரஞ்சகமான படம். குடும்பத்தோடு வரும் ஆடியன்ஸை மனதில் வைத்துதான் திரைக்கதை எழுதினேன்.
அந்த வகையில் ஒரு டிக்கெட்ல நான்கு படம் பார்த்த திருப்தி இருக்கும்.
ஏன்னா, ஒரே படத்துல
நான்கு விதமான வாழ்க்கையை சொல்லியிருக்கிறேன். அந்த நான்கு கதைகளிலும் உணர்வுகளும்,
உறவுகளும் பின்னிப் பிணைந்திருக்கும். என்னுடைய ஒட்டுமொத்த டீம் மெம்பர்ஸ் கொடுத்த
ஒத்துழைப்பால்தான் இந்தப் படத்தை கைக்கு அடக்கமான பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் முடிக்க
முடிந்தது”
என்கி றார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
No comments:
Post a Comment