உறுப்பினர்
அடையாள அட்டையில் காமராஜர், மூப்பனார் படம்
நீக்கிய விவகாரத்தில், ஜி.கே.வாசனை
சந்தித்து பேசிய பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர்
ஞானதேசிகன் தனது பதவியை நேற்று திடீர்
ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ்
மீண்டும் உடையும்
என்ற பரபரப்பு கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது. அதே
சமயம் ஜி.கே.வாசன்
புது கட்சி தொடங்குவது குறித்து
தீவிர ஆலோசனையில்
ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற
தேர்தலுக்கு பின்பு சிதம்பரம், வாசன்
தரப்புக்கு இடையே பனிப்போர்
உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இருதரப்புக்கும் இடையே தமிழக
காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிப்பதில்
கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் தலைவராக
அனைவருக் கும்
நன்றாக தெரிந்த முகமாக இருக்க
வேண்டும் என்ற கருத்தை சிதம்பரம் தெரிவித்து இருந்தார். இதன் மூலம் ஜி.கே.வாசன், சிதம்பரம் கோஷ்டி
பூசல் மேலும் முற்றியது. எனினும்,
தமிழக காங்கிரஸ் தலைவர்
விஷயத்தில், டெல்லி மேலிடம் இந்த
விஷயத்தில் எந்த ஒரு முடிவையும் தெரிவிக்காமல் அமைதி காத்தது. ஆனாலும்
ஜனவரி மாதம்
உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன்
பின்பு தமிழக காங்கிரஸ்
தலைவர் மாற்றப்படலாம் என தகவல் வெளியானது.
மேலும்,
மீனவர் பிரச்னை, நாடாளுமன்ற வேட்பாளர்கள் தேர்வு, ஈழத் தமிழர்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஜி.கே.வாசனுக் கும் டெல்லி மேலிட
தலைவர்களுக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அப்போது, ஜி.கே.வாசன்
மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை
தொடங்க வாய்ப்பிருப்பதாக சிதம்பரம் தரப்பினர் மேலிடத்தில் புகார்
செய்தனர். இதனால் ஜி.கே.வாசன் மீது மேலிடம்
அதிருப்தியில் இருந்து
வந்தது. இதனால், அவரது ஆதரவாளரான
ஞானதேசிகன் மாற்றிவிட்டு,
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதிதாக
ஒருவர் நியமிக்கப்படலாம்
என தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில், உறுப்பினர்
சேர்க்கையில் வழங்கப்படும் அடையாள அட்டையில் மூப்பனார் படத்தை நீக்க வேண்டும்
என்று சிதம்பரம் தரப்பினர் மேலிடத்தில்
புகார் களை அனுப்பி போர்க்கொடி
தூக்கினர். தற்போது வழங்கப்பட்டு
வரும் உறுப்பினர் அடையாள அட்டையில் காமராஜர், மூப்பனார்,
சோனியா, ராகுல் ஆகியோரது படங்கள்
இடம்பெற்றுள்ளன. இதில்
மூப்பனார், காமராஜர் படத்தை நீக்க வேண்டும்
என்று மாநில தலைவர்
ஞானதேசிகனுக்கு காங்கிரஸ் மேலிடம் 3 மாதங்களுக்கு முன்பே
உத்தரவிட்டது.
ஆனால்,
இவர்கள் படம் இல்லாமல் உறுப்பினர்
அட்டை வழங்குவது என்பது
தமிழக காங்கிரசில் நடக்காத காரியம் என
கூறி ஞானதேசிகனும் அதை
கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து அதே உறுப்பினர் அட்டைகளே வழங்கப்பட்டு
வந்தது. இதற்கிடையே மேலிடத்தில் தமிழக காங்கிரசை சேர்ந்த பல்வேறு அணிகள்
தங்களது முக்கிய தலைவர்கள் படத்தையும் அடையாள
அட்டையில் இடம் பெறச் செய்ய
வேண்டும் என்று மேலிடத்தை
அணுகினர். இந்த விவகாரம் விஸ்வரூபம்
எடுத்ததை தொடர்
ந்து, கடந்த 27ம்தேதி டெல்லியில்
நடந்த மாநில தலைவர்கள் கூட்டத்தில், இதுகுறித்து மேலிட தலைவர்கள் முக்கிய
முடிவுகளை அறிவித்தனர்.
அதாவது, காமராஜர், மூப்பனார் படங்களை அகற்றிவிட்டு
புதிதாக அடையாள அட்டைகளை காங்கிரஸ்
மேலிடமே அச்சிட்டு தரும். அதை
மட்டுமே உறுப்பினர் அடை யாள அட்டைகளாக
வழங்க வேண்டும்.
ஏற்கனவே வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை திரும்ப பெற
வேண்டும் என்று ஞானதேசிகனுக்கு உத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தில்
மேலிடம் கண்டிப்பு காட்டியதால், ஞானதேசிகன் மேலிடத்தின்
உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும், மேலிட தலைவர்களான
அகமது படேல், ஜனார்தன திவேதி
ஆகியோரை தொலைபேசியில்
தொடர்பு கொண்டு தனது எதிர்ப்பை
தெரிவித்துள்ளார். இந்த
விஷயம் தமிழகத்தில் உள்ள ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் மற்றும் பழம்பெரும்
காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை திரும்பிய ஞானதேசிகன்
நேற்று ஜி.கே.வாசனை ஆழ்வார்பேட்டையில்
உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது, காங்கிரஸ் பொருளாளர் கோவை தங்கம் மற்றும் முக்கிய
தலைவர்களும் வந்தனர். அடையாள அட்டை விவகாரம் குறித்து
தீவிர ஆலோசனை நடத்தினர். அப்போது
சில முக்கிய முடிவுகள்
எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று
மாலை தமிழக காங்கிரஸ் தலைவர்
ஞானதேசிகன் தனது பதவியை
திடீரென ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அகில இந்திய
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பி
வைத்தார். இது
தமிழக காங்கிரசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,
வாசன் ஆதரவாளர்கள் இன்று சென்னையில் ஒன்று
கூடி ரகசிய
ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
காமராஜர்,
மூப்பனார் படம் இல்லாத அடையாள
அட்டை எங்களுக்கு தேவையில்லை
என்று கூறி தங்கள் எதிர்ப்பை
காட்டவும் திட்டமிட்டுள்ளனர்.
எனவே மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ்
கட்சி உதயமாக
வாய்ப்பிருப்பதாக அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவித்திருப்பது
மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஜி.கே.வாசன்
ஆதரவாளர்கள் கூறியதாவது, ‘‘ தமிழகத்தில் காமராஜர்தான்
காங்கிரஸ். காங்கிரஸ் என்றால் அது காமராஜர்தான். கிங்
மேக்கர் என்று அழைக்கப்பட்ட அவரது
படம் நீக்க வேண்டும் என்பதை, எந்த காங்கிரஸ்காரனும்
ஏற்க மாட் டான். அப்படி
சொன் னால்,
அவன் காங்கிரஸ்காரனாக இருக்க மாட்டான். எங்கள்
கோரிக்கை ஏற்காவிட்டால்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உடையும். அதே
சமயம் புது
கட்சி உருவாவதை தடுக்க முடியாது. அதற்கான முன்னோட்டம்தான்,
ஞானதேசிகன் ராஜினாமா’’ என்றனர்.
ராஜினாமா
கடிதத்தில் இருப்பது என்ன?
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், சோனியாந்திக்கு
எழுதிய ராஜினாமா
கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக
பணியாற்ற வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.
இதற்காக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்திக்கு
என்றும் விசுவாசமாக
இருப்பேன். என் அளவில் காங்கிரஸ்
கட்சிக்குள் ஒற்றுமையை
ஏற்படுத்த முயற்சி எடுத்து பல
கூட்டங்களை நடத்தியுள்ளேன்.
மாவட்ட வாரியாகவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
தற்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை மீண்டும் மாற்றி
அமைப்பதற்கு வசதியாக ராஜினாமா முடிவை
எடுத்துள்ளேன்.
இவ்வாறு
அதில் கூறியுள்ளார்.
அடுத்த
தலைவர் யார்?
அடையாள
அட்டையில் காமராஜர், மூப்பனார் படங்கள் நீக்கிய விவகாரத்தில் ஞானதேசிகன் ராஜினாமா செய்திருப்பது கட்சியினர் மத்தியில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலிடத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்த வாசன் ஆதரவாளர்கள் களம்
இறங்கியுள்ளனர். இந்நிலையில்
புதிய தலைவர் யார் நியமிக்கப்படுவார்
என்ற எதிர்பார்ப்பும் கட்சியினர்
மத்தியில் ஏற்பட்டுள்ளது. வாசன், சிதம்பரம் அல்லாமல் பொதுவான
ஒருவரை தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாகவும்,
அதற்கான பட்டியலில்,
திருநாவுக்கரசர், செல்லக்குமார், சுதர்சன நாச்சியப்பன்,
வசந்தகுமார் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில்
யாராவது ஒருவர் நியமிக்க வாய்ப்பிருப்பதாகவும்
டெல்லி காங்கிரஸ்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment