தமிழில் ‘நெஞ்சிருக்கும்
வரை’,
‘பயணம்‘,
‘வெடி’,
‘6’ உட்பட பல படங்களில் நடித்தவர் பூனம் கவுர். இப்போது ஆர்.கே. நடிக்கும் ‘என் வழி
தனி வழி’
படத்தில் நடித்து வருகிறார்.
இவர் ராம் கோபால்
வர்மா இயக்கும் ‘ஸ்ரீதேவி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வந்தார்.
இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் படத்தில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக
அனுஷ்கிரீத்தி என்ற புதுமுகம் நடிக்கிறார். அந்தப் படத்தில் இருந்து பூனம் விலகியது
ஏன் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
படத்தின் கதை,
17 வயது மாணவன் ஒருவன் தனது டீச்சர் மேல் ஆசைக்கொள்வது போன்றது என்று கூறப்படுகிறது.
இதில் டீச்சர் கேரக்டரில் பூனம் நடிக்க சம்மதித்திருந்தார். படப்பிடிப்பின்போது பதினேழு
வயது பையனுக்குப் பதிலாக, பத்து வயது பையனை நடிக்க வைத்து படத்தை எடுத்துக்கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த
பூனம் கவுர், அதில் விருப்பமில்லாமல் படத்தில் இருந்து விலகி விட்டதாக அவர் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.‘ஸ்ரீதேவி’ படத்தின் போஸ்டர் வெளியான போதே சர்ச்சை
கிளம்பியது. ஆபாசமாக உள்ளது எனக் கூறி பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நடிகை ஸ்ரீதேவி,
தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று வழக்குத் தொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment